Fixed Deposit : 3 முறை ரெப்போ வட்டியை குறைத்த ஆர்பிஐ.. இருப்பினும் FD திட்டங்களுக்கு 8.5% வரை வட்டி வழங்கும் வங்கிகள்!

High-Yield Fixed Deposit Schemes | இந்தியாவில் உள்ள பல முன்னணி வங்கிகள் நிலையான வைப்பு நிதி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்த திட்டங்களுக்கு அதிக வட்டி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கு 8.5 சதவீதம் வரை வட்டி வழங்கும் வங்கிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Fixed Deposit : 3 முறை ரெப்போ வட்டியை குறைத்த ஆர்பிஐ.. இருப்பினும் FD திட்டங்களுக்கு 8.5% வரை வட்டி வழங்கும் வங்கிகள்!

மாதிரி புகைப்படம்

Published: 

26 Jul 2025 21:32 PM

பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள முதலீடு திட்டம் என்றால் அது நிலையான வைப்பு நிதி (FD – Fixed Deposit) திட்டம் தான். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் பாதுகாப்பான வருமானத்தை பெறலாம் என்பதால், ஏராளமான பொதுமக்கள் இந்த திட்டங்களை தேர்வு செய்து முதலீடு செய்து வருகின்றனர். நிலையான வைப்பு நிதி திட்டங்கள் பாதுகாப்பான வருமானத்தை வழங்கினாலும், ரெப்போ வட்டி விகிதம் (Repo Interest Rate) குறைக்கப்படுவது லாபத்தை குறைக்கும் விதமாக அமைந்துவிடும். இந்தியன் ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank of India) இதுவரை மூன்று முறை ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்துள்ள நிலையிலும் சில வங்கிகள் தங்களது நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கு 8.5 சதவீதம் வரை வட்டி வழங்குகின்றன. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கு 8.5 சதவீதம் வரை வட்டி வழங்கும் வங்கிகள்

ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி தனது 888 நாட்களுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு அதிகபட்சமாக 7.6 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது.

ESAF ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

ESAF ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி தனது 444 நாட்களுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு அதிகபட்சமாக 7.60 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது.

ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி தனது ஐந்து ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு அதிகபட்சமாக 8.20 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது.

ஸ்லைஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

ஸ்லைஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி தனது 18 மாதங்களுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு அதிகபட்சமாக 8.50 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது.

சூர்யோதை ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

சூர்யோதை ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி தனது ஐந்து ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு அதிகபட்சமாக 8.40 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது.

உஜ்ஜிவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

உஜ்ஜிவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி தனது இரண்டு ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு அதிகபட்சமாக 8.75 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது.

யுனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

யுனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி தனது 1001 நாட்கள் கால அளவீடு கொண்ட நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு அதிகபட்சமாக 7.75 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது.

உட்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

உட்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி தனது 2 முதல் 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு அதிகபட்சமாக 8 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது.