ரூ.10 லட்சம் வரை இன்சூரன்ஸ் கிடைக்கும் அஞ்சலக திட்டம்.. இத்தனை சிறப்பு அம்சங்களா?
Gram Suraksha Yojana | பொதுமக்களுக்கு பலன் அளிக்கும் வகையில் அரசு அஞ்சலகங்கள் மூலம் பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகை திட்டங்களில் ஒன்றுதான் இந்த கிராம் சுரக்ஷா யோஜனா. இதில் ரூ.10 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படுகிறது.

மாதிரி புகைப்படம்
நகரங்களில் மட்டுமன்றி கிராமப்புறங்களில் வசிக்கும் பொதுமக்களும் பயனடையும் வகையில் அஞ்சலகங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு (Saving) மற்றும் முதலீட்டு (Investment) திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் சாமானிய மக்கள் பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் பாதுகாப்பான வருமானத்தை தருவதால் பெரும்பாலான பொதுமக்கள் நம்பி முதலீடு செய்கின்றனர். அந்த வகையில் ரூ.10 லட்சம் வரை இன்சூரன்ஸ் வழங்கும் அஞ்சல சேமிப்பு திட்டம் ஒன்று குறித்தும் அதன் சிறப்பு அம்சங்கள் குறித்தும் விரிவாக பார்க்கலாம்.
கிராம் சுரக்ஷா யோஜனா – சிறப்பு ஆயுள் கப்பீட்டு திட்டம்
பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அஞ்சலகங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் கிராம் சுரக்ஷா யோஜனா (Gram Suraksha Yojana). இது ஒரு ஆயுள் காப்பீட்டு திட்டம் ஆகும். கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களின் நிதி பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் இணைய விரும்பும் நபர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆகவும், அதிகபட்ச வயது 55 ஆகவும் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது.
இதையும் படிங்க : PPF : ரூ.12,500 முதலீடு செய்து ரூ.40 லட்சம் பெறலாம்.. அசத்தம் அஞ்சலக பிபிஎஃப்.. முதலீடு செய்வது எப்படி?
ரூ. 10 லட்சம் வரை காப்பீட்டு தொகை பெறலாம்
இந்த கிராம் சுரக்ஷா யோஜனா திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.10,000 காப்பீட்டு தொகையும், அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரையும் காப்பீட்டு தொகை பெற முடியும். இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் நபர்கள் அதன் பிரீமியம் தொகையை மாதம்தோறும் செலுத்திக்கொள்ளலாம். அது தவிர மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, அரையாண்டு அல்லது ஆண்டுதோறும் என எப்படி வேண்டுமானாலும் பிரீமியம் தொகையை செலுத்த அனுமதி வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க : Post Office: தினமும் ரூ.411செலுத்தினால்… ரூ.43 லட்சம் சம்பாதிக்கலாம்… தபால் நிலைய சூப்பர் திட்டம்
திட்டத்தின் முதிர்வு பலன்கள் என்ன என்ன?
இந்த திட்டத்தில் முதலீடு செய்தவர்கள் திட்டம் முதிர்ச்சி அடையும்போது அவருக்கு உறுதி அளிக்கப்பட்ட காப்பீட்டு தொகை மற்றும் போனஸ் தொகை ஆகியவை சேர்த்து வழங்கப்படும். ஒருவேளை முதலீடு செய்த நபர் திட்டம் முடிவடைவதற்கு முன்னதாக உயிரிழந்துவிட்டால் நாமினியாக உறுதி அளிக்கப்பட்ட நபருக்கு பாலிசி தொகை மற்றும் அதற்கான போனஸ் ஆகியவை சேர்த்து வழங்கப்படும். இந்த திட்டத்தில் முதலீடு செய்த நபர் திட்டம் முடியும் வரை அதில் முதலீடு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.