Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Gold Price : இரண்டு வாரங்களாக சரிவில் இருக்கும் தங்கம்.. முதலீடு செய்ய இது சரியான நேரமா?

Is This The Right Time To Buy Gold | தங்கம் வரலாறு காணாத உச்சத்தில் இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், இனி வரும் காலங்களில் தங்கம் விலை நிலவரம் என்னவாக இருக்கும், முதலீடு செய்வது சரியானதாக இருக்குமா என்பது குறித்து பார்க்கலாம்.

Gold Price : இரண்டு வாரங்களாக சரிவில் இருக்கும் தங்கம்.. முதலீடு செய்ய இது சரியான நேரமா?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 09 Nov 2025 14:47 PM IST

2024 மற்றும் 2025 இவை இரண்டும் தங்கத்திற்கு மிக சிறந்த ஆண்டாக அமைந்துள்ளது. காரணம், கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்கம் (Gold) மிக கடுமையான விலை உயர்வை சந்தித்துள்ளது. அதிலும் குறிப்பாக, 2025 ஆம் ஆண்டு தங்கம் விண்ணை முட்டும் அளவுக்கு விலை உயர்வை அடைந்தது. இதன் காரணமாக தங்கம் வாங்கவே முடியாது ஒரு அரிய பொருளாக மாறிவிடுமோ என்று சாமானிய மக்கள் மத்தியில் அச்சம் எழ தொடங்கியது. காரணம், ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்தை நெருங்கி விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் தான் தங்கம் சற்று சரிவை சந்தித்துள்ளது. குறிப்பாக கடந்த இரண்டு வாரங்களாக தங்கம் பெரிய விலை உயர்வு இல்லாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில், தற்போது தங்கம் வாங்குவது சிறப்பானதாக இருக்குமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கடும் உயர்வுக்கு பிறகு சரிந்த தங்கம் விலை

கடந்த சில நாட்களாக தங்கம் கடும் உச்சத்தில் இருந்தது. குறிப்பாக அக்டோபர் 17, 2025 அன்று தங்கம் ரூ.97,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் காரணமாக விரைவில் தங்கம் ரூ.1 லட்சத்தை எட்டும் என்ற சூழல் உருவானது. ஆனால், பொதுமக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக தங்கம் சரிவை சந்தித்தது. அதாவது, அக்டோபர் 22, 2025 அன்று தங்கம் சர்வதேச அளவில் 6.3 சதவீதம் சரிவை சந்தித்தது. அதனை தொடர்ந்து தங்கம் மேலும் சரிவை சந்தித்து தற்போது ரூ.90,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக கடந்த இரண்டு வாரங்களாக தங்கம் ரூ.90,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க : நகை கடைகளில் சீட்டு கட்டி தங்கம் வாங்குவதில் இவ்வளவு பலன்களா?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

தற்போது தங்கத்தில் முதலீடு செய்வது சிறந்ததா?

அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை குறைந்தது, உலக நாடுகள் மத்தியில் சமாதானம் நிலவுவது, உலக அளவில் தங்கத்தின் தேவை குறைந்துள்ளது, லாபம்  பார்க்க முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்பனை செய்வது ஆகியவறை தங்கம் விலை குறைய முக்கிய காரணமாக உள்ளது. தங்கம் விலை (Gold Price) தற்போது ரூ.90,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், உலக நாடுகள் இடையேயான அமைதியான சூழல் மற்றும் அமெரிக்க மத்திய வட்டி விகிதம் ஆகியவை குறைப்பின் மூலம் தங்கம் இதே நிலையில் நீடிக்கும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க : PF : ஸ்மார்ட்போன் மூலம் பிஎஃப் பணத்தை சுலபமா எடுக்கலாம்.. எப்படி தெரியுமா?

எதிர்கால தேவைக்காக முதலீடு செய்வதற்கு தங்கம் எப்போதுமே சிறந்த தேர்வாக இருக்கும். இந்த நிலையில், பகுதி அளவு தங்கத்தில் முதலீடு செய்வது சிறந்த லாபத்தை பெற உதவி செய்யும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.