Gold Price : ஒரே நாளில் ரூ.7,600 குறைந்த தங்கம் விலை.. நிம்மதி பெருமூச்சு விட்ட சாமானியர்கள்!
Gold and Silver Price Reduced In Chennai | தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக மிக கடுமையான விலை உயர்வை சந்தித்து வந்த நிலையில், இன்று அதிரடியாக விலை குறைந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
சென்னை, ஜனவரி 31 : சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் (Gold) மற்றும் வெள்ளி (Silver) விலை மிக கடுமையான உச்சத்தை சந்தித்து வந்த நிலையில், இன்று (ஜனவரி 31, 2026) அதிரடியாக விலை குறைந்துள்ளது. சென்னையில் நேற்றும் (ஜனவரி 30, 2026) தங்கம் மற்றும் வெள்ளி விலை மிக கடுமையான சரிவை சந்தித்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக கடும் சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
சாமானியர்களின் எட்டா கனியாக மாறிய தங்கம்
தங்கம் விலையில் நாளுக்கு நாள் மாற்றம் இருப்பது இயல்பானதாக உள்ளது. ஆனால், பங்குச்சந்தை, பொருளாதாரம், நுகர்வு, உலக நாடுகள் இடையே நிலவும் புவிசார் பதற்றங்கள் ஆகியவை தங்கம் மற்றும் வெள்ளி மீது மிக கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், வெனிசுலா மற்றும் ஈரான் உடன் அமெரிக்கா மோதலில் ஈடுபட்டு வந்த நிலையில் புவிசார் பதற்றம் அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளியில் அதிக அளவு முதலீடு செய்தனர். உலக அளவில் தங்கம் வாங்குவது அதிகரித்த நிலையில், தங்கம் விலையும் மிக கடுமையான உயர்வை சந்தித்து உச்சத்தில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இதையும் படிங்க : நடுத்தர மக்களுக்கு நிம்மதி அளிக்குமா பட்ஜெட் 2026.. எதிர்பார்ப்புகள் என்ன என்ன?
வெறும் 3 நாட்களில் ரூ.15,000 சரிந்த தங்கம்
| தேதி | ஒரு கிராம் | ஒரு சவரன் |
| 22 ஜனவரி 2026 | ரூ.14,200 | ரூ.1,13,600 |
| 23 ஜனவரி 2026 | ரூ.14,550 | ரூ.1,16,400 |
| 24 ஜனவரி 2026 | ரூ.14,750 | ரூ.1,18,000 |
| 25 ஜனவரி 2026 | ரூ.14,750 | ரூ.1,18,000 |
| 26 ஜனவரி 2026 | ரூ.15,020 | ரூ.1,20,200 |
| 27 ஜனவரி 2026 | ரூ.14,960 | ரூ.1,19,680 |
| 28 ஜனவரி 2026 | ரூ.15,610 | ரூ.1,24,880 |
| 29 ஜனவரி 2026 | ரூ.16,800 | ரூ.1,34,400 |
| 30 ஜனவரி 2026 | ரூ.15,850 | ரூ.1,26,800 |
| 31 ஜனவரி 2026 | ரூ.14,900 | ரூ.1,19,200 |
ஜனவரி 29, 2026 முதல் ஜனவரி 31, 2026 வரையிலான 3 நாட்கள் காலக்கட்டத்தில் மட்டும் தங்கம் ரூ.15,000 சரிவை சந்தித்துள்ளது.
ஒரே நாளில் ரூ..7,600 குறைந்த தங்கம் விலை
சென்னையில் இன்று 22 காரட் தங்கம் ஒரே நாளில் ரூ.7,600 குறைந்துள்ளது. அதாவது கிராமுக்கு ரூ.950 குறைந்து ஒரு கிராம் ரூ.14,900-க்கும், சவரனுக்கு ரூ.7,600 குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல வெள்ளியும் அதிரடியாக விலை குறைந்துள்ளது. அதாவது கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் ரூ.350-க்கும், கிலோவுக்கு ரூ.55,000 குறைந்து ஒரு கிலோ ரூ.3,50,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.