Gold Price : இரண்டாவது நாளாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 960 சரிவு!
Gold Price Reduced In Chennai | நேற்று (பிப்ரவரி 16, 2026) சென்னையில் தங்கம் விலை குறைந்த நிலையில், இன்று இரண்டாவல்து நாளாக தங்கம் விலை குறைந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, பிப்ரவரி 17 : சென்னையில் நேற்று (பிப்ரவரி 16, 2026) தங்கம் விலை (Gold Price) குறைந்த நிலையில், இன்று (பிப்ரவரி 17, 2026) தங்கம் விலை மேலும் குறைந்துள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.120 குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் (Silver Price) மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் தங்கம் விலை ரூ.1 லட்சத்திற்கு கீழ் வரும்?
2026, ஜனவரி மாதத்தில் உச்சத்தில் இருந்த தங்கம் ஜனவரி 29, 2026 தொடர்ந்து கடும் சரிவை சந்தித்து வருகிறது. அதன்படி, கடந்த சில நாட்களாக தங்கம் சீரான விலை ஏற்ற, இறக்கங்களை கொண்டுள்ளது. உலக அளவில் நிலவிய அசாதாரண சூழல்கள் தற்போது தணிந்துள்ளதாகவும், அதன் காரணமாக தங்கம் விலை சீராக உள்ளதாகவும் வல்லுநர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமன்றி, ரஷ்யா மீண்டும் அமெரிக்க டாலர் அடிப்படையில் வர்த்தகம் மேற்கொள்ள உள்ளதாகவும், அவ்வாறு நடைபெறும் பட்சத்தில் டாலரின் மதிப்பு உயர்ந்து இந்தியாவில் தங்கம் ரூ.1 லட்சத்திற்கு கீழ் விற்பனை செய்யப்படலாம் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : தங்கம், வெள்ளி ETFகளில் முதலீடு செய்துள்ளீர்களா?.. செபியின் இந்த அறிவிப்பை பாருங்க!
கடந்த 10 நாட்களுக்கான தங்கம் விலை நிலவரம்
| தேதி | ஒரு கிராம் | ஒரு சவரன் |
| 08 பிப்ரவரி 2026 | ரூ.14,420 | ரூ.1,15,360 |
| 09 பிப்ரவரி 2026 | ரூ.14,650 | ரூ.1,17,200 |
| 10 பிப்ரவரி 2026 | ரூ.14,580 | ரூ.1,16,640 |
| 11 பிப்ரவரி 2026 | ரூ.14,790 | ரூ.1,18,320 |
| 12 பிப்ரவரி 2026 | ரூ.14,600 | ரூ.1,16,800 |
| 13 பிப்ரவரி 2026 | ரூ.14,400 | ரூ.1,15,200 |
| 14 பிப்ரவரி 2026 | ரூ.14,560 | ரூ.1,16,480 |
| 15 பிப்ரவரி 2026 | ரூ.14.560 | ரூ.1,16,480 |
| 16 பிப்ரவரி 2026 | ரூ.14,440 | ரூ.1,15,520 |
| 17 பிப்ரவரி 2026 | ரூ.14,320 | ரூ.1,14,560 |
இதையும் படிங்கா : இதுவரை இல்லாத அளவு அதிக அகவிலைப்படி.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. முக்கிய தகவல்!
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் இன்று (பிப்ரவரி 17, 2026) 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.120 குறைந்து ஒரு கிராம் ரூ.14,320-க்கும், சவரனுக்கு ரூ.960 குறைந்து ஒரு சவரன் ரூ.1,14,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.265-க்கும், ஒரு கிலோ ரூ.2,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.