Gold Price : ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. மீண்டும் ரூ.15,000-த்தை தாண்டிய ஒரு கிராம் தங்கம்!

Gold and Silver Price Increased | தங்கம் கடந்த இரண்டு நாட்களாக விலை குறைந்த நிலையில், இன்று (பிப்ரவரி 28, 2026) அதிரடியாக விலை உயர்ந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Gold Price : ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. மீண்டும் ரூ.15,000-த்தை தாண்டிய ஒரு கிராம் தங்கம்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

28 Feb 2026 10:36 AM

 IST

சென்னை, பிப்ரவரி 28 : சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை (Gold Price) குறைந்த நிலையில், இன்று (பிப்ரவரி 28, 2026) அதிரடியாக விலை உயர்ந்துள்ளது. அதன் காரணமாக தங்கம் விலை தற்போது மீண்டும் ஒரு கிராம் ரூ.15,000-த்தை தாண்டியுள்ளது. இதேபோல வெள்ளியும் விலை உயர்ந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் தங்கம்

2026, ஜனவரி 29 ஆம் தேதிக்கு பிறகு தங்கம் விலை கனிசமாக குறைய ஆரம்பித்தது. புவிசார் பதற்றங்கள் குறைந்த நிலையில், தங்கம் விலை சீராக இருந்ததாக பொருளாதார வல்லுநர்கள் கூறினர். ஆனால், டிரம்பின் வரி விதிப்பால் நிலமை தலைகீழாக மாறியது. டிரம்ப் உலக நாடுகள் மீது விதித்த இறக்குமதி வரிகள் தொடர்பான வழக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இதையும் படிங்க : ரேஷன் அட்டையில் கைரேகை பதிவு செய்து விட்டீர்களா.. உடனே செக் பண்ணுங்க.. முக்கிய தகவல்!

அந்த விசாரணையில் டிரம்ப் விதித்த வரிகள் செல்லாது என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. ஆனால், டிரம்ப் நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து புதியதாக உலகளாவிய வரியை விதித்து அறிவித்தார். முதலில் 10 சதவீதமாக அறிவித்த வரியை இரவோடு இரவாக 15 சதவீதமாக உயர்த்தினார். இதன் காரணமாக தற்போது மீண்டும் தங்கம் விலையில் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 10 நாட்களுக்கான தங்கம் விலை

தேதி  ஒரு கிராம்  ஒரு சவரன் 
19 பிப்ரவரி 2026 ரூ.14,500 ரூ.1,16,000
20 பிப்ரவரி 2026 ரூ.14,420 ரூ.1,15,360
21 பிப்ரவரி 2026 ரூ.14,680 ரூ.1,17,440
22 பிப்ரவரி 2026 ரூ.14,680 ரூ.1,17,440
23 பிப்ரவரி 2026 ரூ.14,860 ரூ.1,18,880
24 பிப்ரவரி 2026 ரூ.14,890 ரூ.1,19,120
25 பிப்ரவரி 2026 ரூ.14,930 ரூ.1,19,440
26 பிப்ரவரி 2026 ரூ.14,920 ரூ.1,19,360
27 பிப்ரவரி 2026 ரூ.14,900 ரூ.1,19,200
28 பிப்ரவரி 2026 ரூ.15,200 ரூ.1,21,600

இதையும் படிங்க : பிஎம் கிசான் 22வது தவணை.. விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.2,000 வரப்போவது எப்போது?

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.300 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,200-க்கும், சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,21,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல வெள்ளியும் அதிரடியாக விலை உயர்ந்துள்ளது. அதாவது வெள்ளி கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.300-க்கும், கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.3,00,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இது தற்போதைய செய்தி, மேலும் சில தகவல்கள் அப்டேட் செய்யப்படுகின்றன.

Follow Us
குதிரை மேல் வந்து டெலிவரி செய்த ப்ளிங்கிட் ஏஜெண்ட்.. இணையத்தில் வைரல் காட்சிகள்..
நான்கு நாட்களுக்கு பிறகு குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
11 மாத குழந்தையின் உயிரைக் காப்பாற்ற ஒன்றிணைந்த மக்கள்
செயல்படாத EPF கணக்குகள்.. தொழிலாளர் அமைச்சகம் முக்கிய முடிவு..