Gold Price : சென்னையில் நான்காவது நாளாக உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
Gold Price Hiked For Fourth Day In Chennai | சென்னையில் கடந்த மூன்று நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வரும் நிலையில், இன்று நான்காவது நாளாக மீண்டும் விலை உயர்ந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
சென்னை, மார்ச் 11 : சென்னையில் இன்று (மார்ச் 11, 2026) நான்காவது நாளாக தங்கம் விலை (Gold Price) உயர்ந்துள்ளது. இன்றைய தினம் தங்கம் கிராமுக்கு ரூ.70 உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் எந்தவித மாற்றமின்றி விற்பனை நேற்றைய (மார்ச் 10, 2026) விலைக்கே செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஈரான் போரால் உயரும் தங்கம் விலை
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் ஹோர்முஸ் நீரிணியை மூடியுள்ளது. இதன் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து , எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் தங்கமும் தொடர் விலை உயர்வை சந்தித்து வருகிறது. சென்னையில், கடந்த மூன்று நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வரும் நிலையில், இன்று நான்காவது நாளாக மீண்டும் விலை உயர்வை சந்தித்துள்ளது.
இதையும் படிங்க : ஒருவேளை உணவை மிச்சப்படுத்தியாவது வெள்ளி வாங்குங்கள்.. ராபர்ட் கியோசாகி வழங்கும் முக்கிய அறிவுரை!
கடந்த 10 நாட்களுக்கான தங்கம் விலை
| தேதி | ஒரு கிராம் | ஒரு சவரன் |
| 02 மார்ச் 2026 | ரூ.15,660 | ரூ.1,25,280 |
| 03 மார்ச் 2026 | ரூ.15,465 | ரூ.1,23,720 |
| 04 மார்ச் 2026 | ரூ.15,200 | ரூ.1,21,600 |
| 05 மார்ச் 2026 | ரூ.15,120 | ரூ.1,20,960 |
| 06 மார்ச் 2026 | ரூ.14,960 | ரூ.1,19,680 |
| 07 மார்ச் 2026 | ரூ.15,050 | ரூ.1,20,400 |
| 08 மார்ச் 2026 | ரூ.15,050 | ரூ.1,20,400 |
| 09 மார்ச் 2026 | ரூ.14,950 | ரூ.1,19,600 |
| 10 மார்ச் 2026 | ரூ.15,050 | ரூ.1,20,400 |
| 11 மார்ச் 2026 | ரூ.15,120 | ரூ.1,20,960 |
இதையும் படிங்க : வீட்டு உரிமையாளர்களே இதெற்கெல்லாம் No.. 2026 ஆம் ஆண்டுக்கான புதிய வாடகை விதிகள் கூறுவது என்ன?
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்
இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,120-க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,20,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எந்தவித மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.300-க்கும், ஒரு கிலோ ரூ.3 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், தங்கம் தொடர்ந்து நான்காவது நாளாக விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.