Gold Price : ஈரான் போருக்கு மத்தியில் நான்காவது நாளாக குறைந்த தங்கம் விலை.. ரூ.2,120 சரிவு!
Gold and Silver Price Reduced In Chennai Today | ஈரான் போரால் உலக அளவில் புவிசார் பதற்றம் நிலவி வரும் நிலையில், தங்கம் விலை நான்காவது நாளாக அதிரடியாக குறைந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
சென்னை, மார்ச் 04 : ஈரான் (Iran) போருக்கு மத்தியில் நான்காவது நாளாக தங்கம் விலை (Gold Price) குறைந்துள்ளது. சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.265 குறைந்த நிலையில், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 குறைந்துள்ளது. ஈரான் போருக்கு மத்தியில் தொடர்ந்து நான்காவது நாளாக தங்கம் விலை குறைந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஈரான் போர் – நான்காவது நாளாக குறைந்த தங்கம் விலை
அணு ஆயுதம் தயாரிக்க கூடாது என ஈரானை, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தொடர்ந்து எச்சரித்து வந்தது. இது தொடர்பான ஈரானுடன், அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாமல் இருந்தது. இதற்கிடையே தான் பிப்ரவரி 28, 2026 அன்று இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரானை தாக்கியது. இதன் காரணமாக ஈரான் மிக கடுமையான சேதங்களை சந்தித்தது. இந்த நிலையில், ஈரான் பதில் தாக்குதல் நடத்த தொடங்கிய நிலையில், 5வது நாளாக இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் இடியே போர் நீடித்து வருகிறது. இந்த சூழலில் இன்று நான்காவது நாளாக தங்கம் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது.
இதையும் படிங்க : SIP-ல் மாதம் ரூ.5,000 முதலீடு செய்தால் எத்தனை ஆண்டுகளில் ரூ.1 கோடி சேர்க்கலாம்.. தெரிந்துக்கொள்ளுங்கள்!
கடந்த 10 நாட்களுக்கான தங்கம் விலை நிலவரம்
| தேதி | ஒரு கிராம் | ஒரு சவரன் |
| 23 பிப்ரவரி 2026 | ரூ.14,860 | ரூ.1,18,880 |
| 24 பிப்ரவரி 2026 | ரூ.14,890 | ரூ.1,19,120 |
| 25 பிப்ரவரி 2026 | ரூ.14,930 | ரூ.1,19,440 |
| 26 பிப்ரவரி 2026 | ரூ.14,920 | ரூ.1,19,360 |
| 27 பிப்ரவரி 2026 | ரூ.14,900 | ரூ.1,19,200 |
| 28 பிப்ரவரி 2026 | ரூ.15,550 | ரூ.1,24,400 |
| 01 மார்ச் 2026 | ரூ.15,775 | ரூ.1,26,200 |
| 02 மார்ச் 2026 | ரூ.15,660 | ரூ.1,25,280 |
| 03 மார்ச் 2026 | ரூ.15,465 | ரூ.1,23,720 |
| 04 மார்ச் 2026 | ரூ.15,200 | ரூ.1,21,600 |
இதையும் படிங்க : இந்தியாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படுமா?.. அதிகாரிகள் கூறுவது என்ன?
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
இன்று (மார்ச் 04, 2026) 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.265 குறைந்து ஒரு கிராம் ரூ.15,200-க்கும், சவரனுக்கு ரூ.2,120 குறைந்து ஒரு சவரன் ரூ.1,21,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.295-க்கும், ஒரு கிலோ ரூ.2,95,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.