தங்க நகையை அடகு வைக்கப்போறீங்களா? வாடிக்கையாளர்களிடம் வங்கிகள் மறைக்கும் விஷயங்கள்
Gold Loan Risks : ஈரான் போர் பதற்றம் காரணமா கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் தங்கத்தை அடகு வைக்கும்போது நாம் கவனிக்காத விஷயம், பின்னாளில் நமக்கு எப்படி சுமையாக மாறும் என்பது குறித்து பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
இந்தியாவில் உடனடியாக கடன் பெற, மக்கள் தங்களிடம் உள்ள தங்க நகைகளை அடகு வைத்து கடன் பெறுகிறார்கள். காரணம், தங்கத்தின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்பதால் அதன் பெயரில் வங்கிகள் உடனடி கடன் வளங்குகின்றன. இதற்கு குறைந்த ஆவணங்கள் மற்றும் எளிய நடைமுறைகள் போன்ற காரணங்களால் பெரும்பாலான மக்கள் இந்த முறையை தேர்வு செய்கிறார்கள். தங்க நகை அடகு வைத்த சில நிமிடங்களில் பணம் நமது கைகளில் கிடைத்து விடுகிறது. ஆனால் வங்கிகள் நம்மிடம் மறைக்கும் சில விஷயங்களும் இருக்கின்றன.
தங்க நகை கடன் எப்படி வழங்கப்படுகிறது?
தங்க நகைக் கடன் என்பது பாதுகாப்பான கடனாக பார்க்கப்படுகிறது. நாம் தங்கத்தை அடகு வைக்கும்போது அதன் மதிப்பை வங்கிகள் பரிசோதித்த அன்றைய விலை நிலவரத்துக்கு ஏற்பட கனட் வழங்குகின்றன. இந்திய ரிசர்வ் வங்கியின் விதிகளின் படி தங்கத்தின் மதிப்பில் 75 சதவிகிதம் வரை கடன் வழங்க வேண்டும். நாம் கடன் மற்றும் அதற்கான வட்டியை முழுமையாக செலுத்திய பிறகு உங்கள் நகைகள் திருப்பி வழங்கப்படும். இந்த கடனுக்கு குறிப்பிட்ட கால வரை நீடிக்கும்.
இதையும் படிக்க : நிலையற்ற நிலையில் தங்கம்.. இப்போது முதலீடு செய்வது சரியானதா?.. முதலீட்டாளர்கள் கூறுவது என்ன?
இந்த முறையில் கடன் பெறும்போது நமக்கு உடனடியாக பணம் கிடைக்கும், மேலும் கடன் பெறுவதற்கு கிரெடிட் ஸ்கோர் அவசியமில்லை. மேலும் பெர்சனல் லோன் அல்லது கிரெடிட் கார்டுகளை ஒப்பிடும்போது வட்டி குறைவாக இருக்கும் போன்ற காரணங்களால் மக்கள் அவசர தேவைகளுக்கு தங்கத்தை அடமானம் வைத்து கடன் பெறுகிறார்கள்.
மறைக்கப்படும் உண்மைகள் என்ன?
ஆனால் தங்க நகை கடன் பெறும் போது சிலர் முக்கிய விஷயங்களை கவனிக்க தவறுகிறார்கள். வட்டி விகிதம் மட்டும் வங்கிகள் எடுத்துக்கொள்ளாது. பிராசசிங் கட்டணம், தங்க நகை மதிப்பீடு கட்டணம், புதுப்பித்தல் கட்டணம் ஆகியவையும் வாடிக்கையாளர்களுக்கு சுமையாக மாறலாம். சில வங்கிகளில் வட்டி மாதந்தோறும் சேர்க்கப்பட்டு, கடைசியில் பெரிய தொகை செலுத்த வேண்டியிருக்கும்.
கடன் செலுத்தும் முறைகளும் ஒரே மாதிரி இருக்காது. சில நேரங்களில் கடன் தொகை மற்றும் வட்டியை மாதாந்திர தவணையாக செலுத்த வேண்டியிருக்கும். சில நேரங்களில் மாதமாதம் வட்டி மட்டும் செலுத்தி கடைசியில் மொத்த அசலையும் செலுத்த வேண்டியிருக்கும். சில நேரங்களில் முழு தொகையையும் ஒரே தவணையில் செலுத்த வேண்டியிருக்கும். இதனை தெரிந்து கொள்ளாமல் இருப்பது கடைசியில் நமக்கு அது சுமையாக மாறலாம்.
இதையும் படிக்க : பிபிஎஃப் திட்டத்தின் மீது குறைந்த வட்டியில் கடன் பெறலாம்.. அதற்கு முன்பு இவற்றை தெரிந்துக்கொள்ளுங்கள்!
நாம் கடனை சரியான நேரத்தில் செலுத்த தவறினால், நம் தங்க நகை ஏலத்தில் விடப்படாலம். ஒன்றிரண்டு தவனைகள் செலுத்த தவறினால் ஏலம் விடப்படாது. ஆனால் தொடர்ந்து நம் வட்டி செலுத்த வில்லை என்றால் தங்க நகை ஏலத்தில் விடப்படும்.