ஒரே ஆண்டில் 36% லாபம்.. 2025 அட்சய திருதியையில் தங்கம் வாங்கியவர்களுக்கு இவ்வளவு லாபமா?

Gold Gave 36 Percentage Profit To Buyers | தங்கம் நாளுக்கு நாள் மிக கடுமையான விலை உயர்வை சந்தித்து வரும் நிலையில், 2025 ஆம் ஆண்டு அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கியவர்கள் சுமார் 36 சதவீதம் லாபம் பெற்றுள்ளனர்.

ஒரே ஆண்டில் 36% லாபம்.. 2025 அட்சய திருதியையில் தங்கம் வாங்கியவர்களுக்கு இவ்வளவு லாபமா?

மாதிரி புகைப்படம்

Published: 

12 Apr 2026 18:03 PM

 IST

தங்கம் விலை (Gold Price) நாளுக்கு நாள் மிக கடுமையான உயர்வை சந்தித்து வருகிறது. ஆனால், என்னதான் தங்கம் விலை உயர்வை நோக்கி சென்றாலும் தங்கம் வாங்கும் பழக்கத்தை இந்தியர்கள் ஒருபோதும் கைவிட மாட்டார்கள். அதிலும் குறிப்பாக அட்சய திருதியை உள்ளிட்ட சுப நாட்களில் ஒரு கிராம் தங்கமாவது வாங்கிவிட வேண்டும் என நினைப்பார்கள். இதன் காரணமாக அட்சய  திருதியை நாளில் நகை கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில், 2026 ஆம் ஆண்டுக்கான அட்சய திருதியை விரைவில் கொண்டாடப்பட உள்ள நிலையில், 2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தங்கம் எவ்வளவு வளர்ச்சி அடைந்துள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

2025 அட்சய திருதியை அன்று தங்கம் விலை என்ன?

அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கி வைத்தால் செல்வம் பெருகும் என்பது இந்தியர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதன் காரணமாக அன்றைய தினம் ஒரு கிராம் தங்கமாவது அவர்கள் வாங்கிடுகின்றனர். அதன்படி, 2025 ஆம் ஆண்டிலும் ஏராளமான மக்கள் போட்டி போட்டுக்கொண்டு அட்சய திருதியை அன்று நகை வாங்கினர். 2025 ஆம் ஆண்டு அட்சய திருதியை ஏப்ரல் 30 ஆம் தேதி வந்தது. அன்றைய தினம் சென்னையில் 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.8,975-க்கும், 24 காரட் தங்க ஒரு கிராம் ரூ.9,791-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல 22 காரட் தங்கம் ஒரு சவரன் ரூ.71,800-க்கு, 24 காரட் தங்கம் ஒரு சவரன் ரூ.78,376-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதையும் படிங்க : உங்கள் உறவுகளின் ஜிபே கணக்கில் நீங்கள் பணம் செலவு செய்யலாம்.. அசத்தலாக அறிமுகமான பாக்கெட் மணி அம்சம்!

ஒரே ஆண்டில் சுமார் 36 சதவீதம் உயர்ந்த தங்கம் விலை

இன்றைய நிலவரப்படி 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.14,100-க்கும் ஒரு சவரன் ரூ.1,12,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.15,382-க்கும், ஒரு சவரன் ரூ.1,23,056-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், 2025 அட்சய திருதியை ஒப்பிட்டு பார்க்கையில் 2026-ல் தங்கம் விலை 36 சதவீதம் உயர்வை சந்தித்துள்ளது. அதாவது, ஒரே ஆண்டில் ரூ.41,000 அதிகரித்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் அட்சய திருதியை அன்று ஒரு சவரன் தங்கம் வாங்கியவர்கள் ரூ.41,000 லாபத்தையும், ஒரு கிராம் தங்கம் வாங்கியவர்கள் ரூ.5,825 லாபத்தையும் கண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
"ஒருமுறை கூட கண் இமைக்கவில்லை" கோலியின் பாராட்டில் நெகிழ்ந்த ஆதித்யா தார்..
ஈரானில் அமெரிக்க விமானி மீட்பு.. மர்மங்கள் நிறைந்த மீட்பு நடவடிக்கை!
toxic மனிதர்களால் ஏற்படும் சிக்கல்.. ஆய்வாளர்கள் கூறுவது என்ன?
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?