Gold Price : சென்னையில் தங்கம் விலை அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் ஷாக்!
Gold and Silver Price Hiked In Chennai | சென்னையில் நேற்று (பிப்ரவரி 20, 2026) தங்கம் விலை குறைந்த நிலையில், இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
சென்னை, பிப்ரவரி 21 : சென்னையில் நேற்று (பிப்ரவரி 20, 2026) தங்கம் விலை (Gold Price)
குறைந்த நிலையில், இன்று (பிப்ரவரி 21, 2026) தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் தங்கம் கிராமுக்கு ரூ.260 உயர்ந்துள்ளது. இதேபோல வெள்ளியும் (Silver) உயர்வை சந்தித்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
இரண்டு நாட்களாக உயர்வை சந்தித்து வரும் தங்கம்
தங்கம் விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு பங்குச்சந்தை, புவிசார் பதற்றங்கள் ஆகியவை முக்கிய காரணிகளாக உள்ளன. 2026 ஜனவரி மாதத்தில் புவிசார் பதற்றம் அதிகரித்து காணப்பட்டதன் காரணமாக தங்கம் விலை கடும் உச்சத்திற்கு சென்றது. அதன் பிறகு படிப்படியாக விலை குறைந்து சீரான விலையில் விற்பனை செய்யப்பட்டது. புவிசார் பதற்றங்கள் குறைந்ததே அதற்கு காரணம் என பொருளாதார வல்லுநர்கள் கூறினர். இந்த நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி சிறிய அளவிலான விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகின்றன.
இதையும் படிங்க : ஆதாரில் இத பண்ணலனா உங்கள் வங்கி கணக்கில் இருக்கு பணத்துக்கு சிக்கல்.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!
கடந்த 10 நாட்களுக்கான விலை நிலவரம்
| தேதி | ஒரு கிராம் | ஒரு சவரன் |
| 12 பிப்ரவரி 2026 | ரூ.14,600 | ரூ.1,16,800 |
| 13 பிப்ரவரி 2026 | ரூ.14,400 | ரூ.1,15,200 |
| 14 பிப்ரவரி 2026 | ரூ.14,560 | ரூ.1,16,480 |
| 15 பிப்ரவரி 2026 | ரூ.14,560 | ரூ.1,16,480 |
| 16 பிப்ரவரி 2026 | ரூ.14,440 | ரூ.1,15,520 |
| 17 பிப்ரவரி 2026 | ரூ.14,320 | ரூ.1,14,560 |
| 18 பிப்ரவரி 2026 | ரூ.14,320 | ரூ.1,13,840 |
| 19 பிப்ரவரி 2026 | ரூ.14,500 | ரூ.1,16,000 |
| 20 பிப்ரவரி 2026 | ரூ.14,420 | ரூ.1,15,360 |
| 21 பிப்ரவரி 2026 | ரூ.14,680 | ரூ.1,17,440 |
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
நேற்று (பிப்ரவரி 20, 2026) தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்த நிலையில், இன்று தங்கம் அதிரடியாக விலை உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.260 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,680-க்கும், சவரனுக்கு ரூ.2,080 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,17,440-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியும் இதேபோல விலை உயர்வை சந்தித்துள்ளது. அதாவது வெள்ளி கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.290-க்கும், கிலோவுக்கு ரூ.20,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,90,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இது தற்போதைய செய்தி, மேலும் சில தகவல்கள் அப்டேட் செய்யப்படுகின்றன.