மகளிர் உரிமைத் தொகை முதல் ரேஷன் கார்டு வரை.. அனைத்து சேவைகளும் கிடைக்கும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்!
Ungaludan Stalin Camps in Tamil Nadu | தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களில் ரேஷன் கார்டு முதல் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வரை அனைத்து சேவைகளும் கிடைக்கின்றது. இந்த நிலையில், உங்களுடன் ஸ்டாலின் முகாம்களின் என்ன என்ன சேவைகள் வழங்கப்படுகின்றன என்பது குறித்து பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
தமிழகத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் (Ungaludan Stalin Camps) பரவலாக நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களில் பொதுமக்களுக்கு தேவையான சேவைகளை அவர்கள் மிக எளிதாக அனுகும் வகையில் அரசு வழிவகை செய்துள்ளது. தமிழகம் முழுவதும் நடத்தப்படும் இந்த உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் ரேஷன் கார்டு முதல் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பித்தல் வரை என அனைத்து சேவைகளும் கிடைக்கின்றன. ஆனால், பெரும்பாலான மக்களுக்கு இந்த முகாம்கள் எங்கு நடைபெறுகின்றன என்று தெரியாமல் உள்ளது. இந்த நிலையில், உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் குறித்து தெரிந்துக்கொள்வது எப்படி, அதில் என்ன என்ன சிறப்பு அம்சங்கள் உள்ளன என்பது குறித்து பார்க்கலாம்.
தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள்
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஜூலை 15, 2025 அன்று உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் நவம்பர் 2025 வரை நடைபெற உள்ளது. பொதுமக்களின் அனைத்து தேவைகளையும் ஒரே இடத்தில் பூர்த்தி செய்துக்கொள்ளும் வகையில் இந்த முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் பொதுமக்கள் தங்களது ரேஷன் கார்டு தொடர்பான சேவைகள், பிறப்பு சான்று, இறப்பு சான்று, வீட்டு வரி தொடர்பான பிரச்னை ஆகியவற்றுக்கு தீர்வு காணலாம். குறிப்பாக இந்த முகாம்கள் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த முகாம்கள் மூலம் ஏராளமான பெண்கள் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.
இதையும் படிங்க : Magalir Urimai Thogai : மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க வருமான சான்றிதழ் அவசியம்.. ஏன்?
மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க சிறந்த அம்சமாக உள்ள முகாம்கள்
தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை திமுக அரசு முழு வீச்சில் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் இதுவரை 1 கோடியே 16 லட்சம் பெண்கள் பயன்பெற்று வருகின்றனர். தமிழகத்தை பொருத்துவரை 2 கோடிக்கும் அதிகமான ரேஷன் அட்டைகள் உள்ள நிலையில், மீதமுள்ள மகளிருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்குவதற்கான பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் மூலம் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மட்டுமே வழங்கப்படும் என்றும், விண்ணப்பம் செய்ய விரும்பும் மகளிர் உரிய ஆவணங்களை சமர்பித்து விண்ணப்பம் செய்துக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே ரேஷன் கார்டு, மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட சேவைகளை பெற விரும்பும் பொதுமக்கள் இந்த உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் மூலம் சேவைகளை பெற்றுக்கொள்ளலாம்.