வெறும் ரூ.50 ஆயிரத்தில் தொடங்கிய நிறுவனம்… ரூ.7 கோடி டர்ன் ஓவர்… சென்னையின் பிரபல டீ பிராண்டை உருவாக்கிய இளைஞர்
Black Pekoe Success Story: சென்னையின் பிரபல டி பிராண்ட்களான பிளாக் பெக்கோ மற்றும் டீ பாய் நிறுவனங்களை உருவாக்கி ஆண்டு வருமானம் ரூ.7 கோடி வருமானம் சம்பாதிக்கும் இளைஞர் ஜோசஃப் ராஜேஷ். அவரது வெற்றிக் கதை குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

ஜோசஃப் ராஜேஷ்
டீ (Tea) என்பது சட்டென உடலுக்கு புத்துணரச்சி அளிக்க கூடிய பானம். எவ்வளவு சோர்வாக இருந்தாலும், அதிலிருந்து மீட்டு சுறுசுறுப்பை அளிக்கிறது. அதனால் தான் டீக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. டீக்கடைகள் என்பது ஒரு பாதுகாப்பான தொழிலாளகா இருக்கிறது. தற்போது அதனை கார்பரேட் நிறுவனங்கள் கையிலெடுத்து, அதனை நவீனப்படுத்தி ஃபிரான்சைஸாக வழங்கி அதிக லாபம் சம்பாத்தித்து வருகின்றனர். ஆனால் தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர், சென்னையில் (Chennai) பிரபல டீ பிராண்டை உருவாக்கியிருக்கிறார். வெறும் ரூ.50,000 முதலீட்டில் உருவாக்கப்பட்ட நிறுவனம், இன்று ஆண்டுக்கு ரூ.7 கோடி லாபம் ஈட்டி வருகிறது. அவரது வெற்றிக்கதை குறித்து பார்க்கலாம்.
தொழில் கனவுக்காக வங்கி வேலையை விட்ட இளைஞர்
கரூர் மாவட்டம் மொச்சகோட்டம் பாளையம் என்ற சிறிய கிராமத்தை சேர்ந்தவர் ஜோசஃப் ராஜேஷ். மிக எளிய குடும்பத்தில் பிறந்த அவர், வாழ்வாதாரத்துக்கே சிரமமாக இருந்திருக்கிறது. இருப்பினும் நன்றாக படித்த அவர் வங்கியில் வேலை பார்த்தார். இருப்பினும் அந்த வருமானம் போதாத நிலையில், வியாபாரம் செய்ய முடிவெடுக்கிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு ரூ. 50,000 முதலீட்டில் சென்னையில் தொடங்கிய நிறுவனம் பிளாக் பெக்கோ (Black Pekoe) நிறுவனம் இன்று தமிழ்நாட்டில் 78 டீ அவுட்லெட்களைக் கொண்ட பிராண்டாக வளர்ந்திருக்கிறது.
இதையும் படிக்க : 1,00,000 அறுவை சிகிச்சைகள்… குறைந்த கட்டணம்… அரவிந்த் கண் மருத்துவமனை நிறுவனரின் சாதனைகள்
கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னை வேளச்சேரியில் உள்ள கிராண்ட் மாலில் வெறும் 100 சதுர அடி இடத்தில் பிளாக் பெக்கோ என்ற டீக்கடையைத் தொடங்கினார். முதல் நாளில் இருந்தே வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. டீயின் சுவையும், கூடவே அவர் அறிமுகப்படுத்திய ஸ்நாக்ஸ் ஐட்டங்களும் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்தது. இதனையடுத்து விரைவிலேயே அவருக்கு தினமும் ரூ.8,0000 அளவில் விற்பனை நடைபெற்றது.
இதனைப் பார்த்த அவர் ரூ.20,00,000 முதலீட்டில் பிளாக் பெக்கோவின் கிளையை, சென்னை ஆலந்தூரில் தொடங்கினார். ஆனால் பார்க்கிங் சிக்கலால் நான்கு மாதங்களிலேயே மூட வேண்டியிருந்தது. இருப்பினும் முயற்சியை கைவிடாமல், ஓஎம்ஆரில் உள்ள ராமானுஜன் சிட்டியில் சிறிய அளவில் ரூ.3 லட்சம் முதலீட்டில் மூன்றாவது அவுட்லெட்டை தொடங்கினார். இதுவே அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.
பிளாக் பெக்கோ நிறுவனத்தின் வளர்ச்சி
தற்போது அந்த நிறுவனம் பிக்பில்லியன் ஃபுட் அண்ட் பிவேரேஜஸ் பிரைவேட் லிமிட்டட் என்ற நிறுவனமாக வளர்ந்துள்ளது. பிளாக் பெக்கோ மற்றும் டீ பாய் என்ற பிராண்டுகளின் 78 அவுட்லெட்டுகள் தமிழ்நாடு முழுவதும் இயங்கி வருகின்றன. கடந்த 2020 முதல் 2021 ஆண்டுகளில் இந்த நிறுவனம் ரூ. 7 கோடி லாபம் பெற்றுள்ளது. விரைவில் ரூ.10 கோடி வருவாய் கிடைக்கும் நிறுவனமாக வளரும் என நம்பப்படுகிறது. பிளாக் பெக்கோ டி ஃபிரான்சைஸை பெற ரூ.6 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை பெற வேண்டும். இண்டீரியர் டிசைன், மெட்டீரியல், பணியாளர் பயிற்சி ஆகிய அனைத்தையும் இந்த நிறுவனம் வழங்குகிறது.
இதையும் படிக்க : இனி நடிகர் இல்ல…. பிஸ்னஸ்மேன்… சத்தமில்லாமல் தொழில் தொடங்கிய ‘பசங்க’ ஸ்ரீராம்
விலை மற்றும் மெனு
ஒரு டீ விலை ரூ.10 முதல் ரூ.30 வரை இருக்கிறது. இஞ்சி டீ, மசாலா டீ, ஏலக்காய் டீ, லெமன் டீ, இஞ்சி டீ என பல்வேறு டீ வகைகள் விற்பனை செய்கிறார்கள். மேலும் கூடுதலாக எக் பஃப், பனீர் பஃப், சிக்கன் பஃப், பனானா கேக் போன்ற ஸ்நாக்ஸ்களும் விற்பனை செய்கின்றன.
பெண்களுக்கு சலுகைகள்
தொழில் துவங்க வேண்டும் என நினைக்கும் பெண்களை ஜோசஃப் ஊக்குவித்து வருகிறார். குறிப்பாக ஹவுஸ் ஒயிஃபாக இருந்து வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என நினைக்கும் பெண்களுக்கு சிறபப் தள்ளுபடியில் ஃபரான்சைஸை வழங்கியுள்ளார். இதுவரை 13 பெண்கள் இவரிடம் ஃபிரான்சைஸை எடுத்து மாதம் ரூ.5 லட்சம் வரை சம்பாதித்து வருகிறார்கள். பெரும்பாலானோரின் கணவர்கள் கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலை இழந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோசப் பெண்கள் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கிறார். வீட்டுமனைவி பெண்களுக்கு சிறப்பு தள்ளுபடி விலையில் ஃபிரான்சைஸ் வழங்கியுள்ளார். இதுவரை 13 பெண்கள் அவரது ஃபிரான்சைஸ் எடுத்துள்ளனர். இவர்கள் மாதம் ரூ.5 லட்சம் விற்பனை செய்து வருகிறார்கள். பெரும்பாலானோரின் கணவர்கள் பாண்டமிக் காலத்தில் வேலை இழந்தவர்கள்.