எக்ஸ் ஷோரூம் காரின் விலை குறைவு, ஆன் ரோடு விலை அதிகம் – ஏன் இந்த மாற்றம்?

Ex-showroom vs On road Price : வாகனங்கள் குறித்த விளம்பரங்களில் எக்ஸ் ஷோரூம் விலை மற்றும் ஆன் ரோடு விலை என இரண்டு விதமாக விலையைக் குறிப்பிடுவதைப் பார்த்திருப்போம். இந்த கட்டுரையில் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

எக்ஸ் ஷோரூம் காரின் விலை குறைவு, ஆன் ரோடு விலை அதிகம் - ஏன் இந்த மாற்றம்?

மாதிரி புகைப்படம்

Updated On: 

06 Jul 2025 14:50 PM

எக்ஸ்-ஷோரூம் விலையில் கார் (Car) விலை குறைவாகவும், ஆன் ரோடு விலைய அதிகமாகவும் இருக்கும். பெரும்பாலான கார் நிறுவனங்கள் எக்ஸ் ஷோரூம் விலையை (Ex-Room Price) மட்டுமே குறிப்பிடுகின்றன. ஆன் ரோடு கார்களின் (On Road Price) விலையை பல விஷயங்கள் தீர்மானிக்கின்றன என்பதால் அதன் விலை முன் கூட்டியே குறிப்பிடப்படுவதில்லை. எக்ஸ் ஷோரூம் விலை தயாரிப்பு செலவுகள் ஆகியவற்றை மட்டுமே வைத்து கார் நிறுவனங்கள் தீர்மானிக்கின்றன. ஆனால் ஆன்ரோடு விலை என்பது வாகனத்தை சாலையில் ஓட்டுவதற்கு தேவையான மொத்த செலவாகும். இது வாகன பதிவு, ஆர்டிஓ செலவுகள்,  காப்பீடு மற்றும் டீலருக்கு அளிக்க வேண்டிய முன்பணம் ஆகியவை ஆன் ரோடு விலையை தீர்மானிக்கின்றன.  இந்த கட்டுரையில் எக்ஸ் ஷோரூம் விலை மற்றும் ஆன் ரோடு கார் விலை ஆகியவற்றுக்கு உள்ள வித்தியாசம் குறித்து பார்க்கலாம்.

எக்ஸ்-ஷோரூம் விலை என்பது என்ன?

எக்ஸ்-ஷோரூம் விலை என்பது வாகன உற்பத்தியாளர் அல்லது டீலரால் நிர்ணயிக்கப்படும் அடிப்படை விலையாகும். இது ஷோரூமில்  விற்பனைக்கு வந்துள்ள கார்களுக்கான விளம்பரங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும். இதில் வாகனத்தின் உற்பத்தி செலவு, அதில் பயன்படுத்தப்பட்டிருக்கிற டெக்னாலஜி, பொருட்கள் ஆகியவற்றை வைத்து தீர்மானிக்கப்படும். இது வாகனத்தை உருவாக்க உற்பத்தியாளர் செலவிட்ட தொகை. மேலும் ஜிஎஸ்டியும் எக்ஸ் ஷோரூம் விலையில் சேர்க்கப்படும். இந்தியாவில் தற்போது கார்களுக்கு 28 சதவிகிதம் ஜிஎஸ்டி சேர்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து டீலர் தனது ஊழியர் சம்பளம், ஷோரூம் வாடகை மற்றும் லாபத்தை கணக்கில் கொண்டு கூடுதலாக 2 முதல் 3 சதவிகிதம் வரை எக்ஸ் ஷோரூம் விலையில் சேர்க்கப்படுகிறது.

ஆன்-ரோடு விலை என்பது என்ன?

  • ஆன்-ரோடு விலை என்பது வாகனத்தை ஷோரூமிலிருந்து வாங்கி சாலையில் சட்டப்பூர்வமாக ஓட்டுவதற்கு நீங்கள் செலுத்த வேண்டிய மொத்தத் தொகையாகும். இது எப்போதும் எக்ஸ்-ஷோரூம் விலையை விட அதிகமாக இருக்கும், ஏனெனில் இதில் பல கூடுதல் கட்டணங்கள் மற்றும் வரிகள் அடங்கும்.
  • முதலாவதாக ஆன் ரோடு விலையில் சாலை வரி சேர்க்கப்படும். இது 4 முதல் 5 சதவிகிதம் வரை ஆக இருக்கலாம். இது மாநில அரசால் விதிக்கப்படும் வரி என்பதால், இது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும். மேலும் இது எலக்ட்ரிக், டீசல், பெட்ரோல் ஆகிய கார்களைப் பொறுத்து சாலை வரி விதிக்கப்படும்.
  • இந்தியாவில் புதிதாக வாங்கும் வாகனங்கள் ஆர்டிஓ அலுவலகத்தில் பதிவு செய்யப்பட வேண்டியது கட்டாயமாகும். இது பதிவு எண் பெறவும், ஆர்சி பெறுவதற்கான செலவும் அடங்கும். இதுவும் மாநிலத்தை பொறுத்தும் மாறுபடும்.
  • மோட்டார் வாகன சட்டம் 1988 இன்படி, ஒவ்வொரு வாகனத்திற்கும் காப்பீடு பெறுவது கட்டாயம். இது விபத்து, திருட்டு, பேரழிவுகளுக்கு எதிராக பாதுகாப்பை வழங்கும். இது மொத்த செலவில் 2 முதல் 3 சதவிகிதம் கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கலாம்.
  • சில டீலர்கள் வாகனத்தை தொழிற்சாலையில் இருந்து ஷோரூமிற்கு கொண்டுவருவதற்கும், வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்வதற்கும் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்கள். இது டீலரைப் பொறுத்து மாறுபடும்.
  • சில மாநிலங்களில் டீசல் வாகனங்களுக்கு 25 சதவிகிதம் வரை பசுமை வரி விதிக்கப்படுகிறது.