Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

PF Accounts Merge: உங்களிடம் பல பிஎஃப் கணக்குகள் இருக்கா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!

PF Accounts Merge: ஒருவரிடம் பல பிஎஃப் கணக்குகள் இருந்தால் எதிர்காலத்தில் கணக்கை நிர்வகிப்பதில் சிக்கல் ஏற்படும். மேலும் அவசர தேவைகளின் போது பணம் எடுப்பதும் சவாலான பணியாக மாறும். இந்த கட்டுரையில் பல பிஎஃப் கணக்குகள் இருந்தால் அவற்றை எப்படி இணைப்பது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

PF Accounts Merge: உங்களிடம் பல பிஎஃப் கணக்குகள் இருக்கா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 09 Jun 2025 17:14 PM

வேலை மாறும்போது புதிய பி.எஃப் (PF) கணக்குகள் உருவாகும் சூழ்நிலை வழக்கமாகவே உள்ளது.  சில பல ஆண்டுகளில் ஒருவர் பல வேலைகளுக்கு மாறுவதால் அவரது பிஎஃப் கணக்குகளும் அதிகரிக்கும். இதன் காரணமாக பண நிதி மேலாண்மை சிக்கலாகும். இதற்கான தீர்வாக, பி.எஃப் கணக்குகளை ஒரே கணக்காக இணைப்பது மிகவும் அவசியம்.  ஒருவருக்கும் ஒரு யுஏஎன் (UAN) எண் இருந்தாலும் அவருக்கு பல பிஎஃப் கணக்குகள் இருக்கும். இதனால், பி.எஃப் தொகைகள் பல கணக்குகளில் இருக்கும்.  இந்த நிலையில் பிஎஃப் கணக்குகளை இணைப்பதன் மூலம் ஒரே கணக்கில் தொகைகளை ஒரே இடத்தில் நிர்வகிக்க முடியும். எதிர்காலத்தில் அவசர தேவைகளுக்கு பணம் எடுக்கும் போதோ அல்லது இதர விவரங்களை சேகரிக்கும்போதோ எளிதாகிறது.  இந்த கட்டுரையில் பல்வேறு பிஎஃப் கணக்குகளை எப்படி இணைப்பது என்பது குறித்து பார்க்கலாம்.

இபிஎஃப்ஓ இணையதளம் வழியாக பிஎஃப் கணக்குகளை இணைக்கும் முறை

பிஎஃப் கணக்குகளை இணைக்கும் முறை

 

இமெயில் மூலமாக பிஎஃப் கணக்குகளை இணைக்கும் முறை

  • உங்கள் பெயரில் ஏற்கனவே உள்ள பிஎஃப் கணக்குகளின் விவரங்களை தொகுத்து, uanepf@epfindia.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

  • உங்கள் மின்னஞ்சலில்:

    • பெயர்

    • பழைய மற்றும் புதிய UAN எண்கள்

    • தொடர்புடைய பிஎஃப் கணக்குகளின் விவரங்கள் இருக்க வேண்டும்.

  • EPFO உங்கள் தகவல்களை சரிபார்த்து, பழைய யுஏஎன்களை முடக்கி, தற்போதைய யுஏஎன் எண்ணை செயல்பாட்டுக்கு கொண்டு வரும்.

  • பின்னர், பழைய பிஎஃப் கணக்குகளில் உள்ள தொகையை புதிய பிஎஃப் கணக்கில் மாற்றுவதற்கான கிளைம் (claim) ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.

ஒரே யுஏஎன் பயன்படுத்தப்பட்டால், எதிர்காலத்தில் பணி ஓய்வு நிதியை எளிதாக பெற முடியும். மேலும் பிஎஃப் கணக்குகளை ஒழுங்குபடுத்துவதன் மூலம் நிதி மேலாண்மை எளிதாகும். ஓய்வுக்கு பின்னர் நிதி பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.