EPFO : எஃப் முன்பணம் பெறுவதில் வந்த முக்கிய மாற்றம்.. புதிய விதிகள் கூறுவது என்ன?

EPFO Released New Rules for Advance | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் பயனர்களின் நலனுக்காக அப்போது பல புதிய அப்டேட்டுகளை வெளியிடும். அந்த வகையில் பிஎஃப் முன்பணம் பெறுவது குறித்து சில விதிகளை மாற்றம் செய்து அறிவித்துள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

EPFO : எஃப் முன்பணம் பெறுவதில் வந்த முக்கிய மாற்றம்.. புதிய விதிகள் கூறுவது என்ன?

மாதிரி புகைப்படம்

Updated On: 

29 Apr 2025 18:53 PM

இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களின் நலனுக்கான ஒரு அமைப்பு தான் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO – Employee Provident Fund Organization). இந்த அமைப்பில், இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் அங்கீகாரம் பெற்ற தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் பெயர்களில் கணக்கு தொடங்கப்பட்டு, அந்த கணக்கில் குறிப்பிட்ட தொகை வரவு வைக்கப்படும். இவ்வாறு மாதம் மாதம் வரவு வைக்கப்படும் பணத்தை ஊழியர்கல் எப்போது வேண்டுமானாலும் தங்களது தேவைகளுக்காக பயன்படுத்திக்கொள்ளலாம்.

மூன்று முக்கிய தேவைகளுக்காக பணம் எடுக்க அனுமதிக்கும் இபிஎஃப்ஓ

இபிஎஃப்ஓ-ல் இருந்து பணத்தை எடுக்க ஊழியர்களுக்கு சில விதிகள் உள்ளன. அதாவது, ஊழியர்கள் தங்களது பிஎஃப் பணத்தை திருமணம், மருத்துவம், கல்வி உள்ளிட்ட மூன்று முக்கிய தேவைகளுக்காக எடுத்துக்கொள்ள அணுமதிக்கப்படுகிறார். அதிலும் திருமணம் உள்ளிட்ட காரணங்களுக்காக பணம் எடுக்க மூன்று முறை மட்டுமே பணம் எடுக்க அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், மருத்துவ தேவைகளுக்காக ஊழியர்கள் எப்போது வேண்டுமானாலும் பிஎஃப் பணத்தை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

இபிஎஃப்ஓ முன்பணத்தை பெறுவதில் வந்த முக்கிய மாற்றம்

இபிஎஃப்ஓவின் சமீபத்திய அறிவிப்பின் படி, இப்போது உறுப்பினர்கள் வீடு கட்டி முடிக்கப்பட்ட 5 ஆண்டுகளுக்குப் பிறகு வீட்டை புதுப்பிக்க சுய அறிவிப்பை (Self Declaration) சமர்ப்பித்து முன்பனத்தை பெறலாம். இதற்கு முன்பனம் கோரிக்கை பத்தி 68 B-ன் கீழ் முந்தைய எந்த ஒரு திரும்பபெறுதலுடன் இணைக்கப்படவில்லை என்று உறுப்பினர்கள் அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

பத்தி 68B-ன் படி வீடு மற்றும் பிளாட் வாங்குதல், நிலத்தை கையகப்படுத்துதல், வீட்டை கட்டுதல் போன்ற பல்வேறு வீடு தொடர்பான தேவைகளுக்கான அட்வான்ஸ் தொகைகளை (Advance Money) பெற அனுமதி வழங்கப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், பத்தி 68 பி 7-ன் கீழ் உறுப்பினர்கள் முன்பணத்தை பெறுவதற்கு வசதியாக குடியிருப்பு அல்லது வீடு கட்டி முடிக்கப்பட்ட நாளிலிருந்து 60 மாதங்களுக்கு பிறகு தான் இந்த முன்பணம் கோற வேண்டும் என்றும், பத்தி 68 B-ன் கீழ் முந்தைய திரும்ப பெறுதலுடன் இணைக்கப்படாது என்றும் சுய அறிவிப்பின் அடிப்படையில் பிஎஃப் முன் பணத்திற்கான விண்ணப்பத்தை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் தனது சுற்றறிக்கையில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.