மார்ச் 31-க்குள் இவற்றை செய்யவில்லை என்றால் சிக்கல்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

Fundamental Processes Before March 31st 2026 | மார்ச் மாதம் முடிவடைய இன்னும் ஒருசில நாட்கள் மட்டுமே உள்ளன. இந்த நிலையில், மார்ச் மாதம் முடிவடைவதற்குள் சில விஷயங்களை செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. அவை என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மார்ச் 31-க்குள் இவற்றை செய்யவில்லை என்றால் சிக்கல்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

24 Mar 2026 17:50 PM

 IST

தற்போது மார்ச் மாதம் இறுதியில் உள்ள நிலையில், இன்னும் சில நாட்களில் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. இந்த நிலையில், மார்ச் மாத இறுதிக்குள் சில விஷயங்களை முடிக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. அதாவது ஆதார் கார்டு (Aadhaar Card), பான் கார்டு (PAN Card) ஆகியவற்றில் சில முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. அவை என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மார்ச் மாத இறுதிக்குள் இவற்றை செய்யவில்லை என்றால் சிக்கல்

மார்ச் 31, 2026-க்குள் ஆதார் கார்டு, பான் கார்டு உள்ளிட்டவற்றில் சில முக்கிய விஷயங்களை மேற்கொள்ள வேண்டும்.

பான் கார்டு விண்ணப்பம்

இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட தனியாக வங்கி கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் பான் கார்டு கட்டாயமாக உள்ளது. முன்பு பான் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால் அதற்கு ஆதார் கார்டு மட்டுமே போதுமானதாக இருந்தது. ஆனால், தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஏப்ரல் 01, 2026 முதல் பான் கார்டு விண்ணப்பிக்கும் நபர்கள் ஆதார் கார்டுடன் பிறந்த தேதியை உறுதி செய்யும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் மார்ச் 31, 2026-க்குள் பான் கார்டுக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்றால் நீங்கள் வெறும் ஆதார் கார்டை மட்டுமே சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம்.

இதையும் படிங்க : கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை.. ஒரே நாளில் ரூ.15 லட்சம் கோடையை இழந்த முதலீட்டாளர்கள்!

கேஸ் சிலிண்டர் கேஒய்சி

ஈரான் போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டு இருந்த நிலையில், உலக அளவில் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு, இந்தியாவில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக, எல்பிஜி கேஸ் சிலிண்டர் புக் செய்வது உள்ளிட்ட சில முக்கியமான விதிகளை மத்திய அரசு அறிமுகம் செய்தது. அந்த வகையில், கேஸ் சிலிண்டர்களுக்கான கேஒய்சியை முடிக்க வேண்டும் என பொதுமக்களை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இதன் மூலம் அனைத்து வீட்டு உபயோக சிலிண்டர் பயனாளர்களும் பயொமெட்ரிக் ஆதார் அங்கீகரிப்பு முடிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Gold Price : பொதுமக்களுக்கு குட் நியூஸ்.. ஒரே நாளில் ரூ.7,600 சரிந்த தங்கம் விலை!

பொதுமக்கள் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்களுக்கான கேஒய்சியை முடிக்க மார்ச் 31, 2026 கடைசி தேதியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us
மாலத்தீவில் நடைபெற்ற படகு விபத்து ரேமண்ட் தலைவர் கௌதம் சிங்கானியா விபத்தில் காயம்
இந்திய பெருங்கடல் வரை பரவிய ஈரான் - இஸ்ரேல் போர்? அதிர்ச்சி தகவல்
மகளுக்காக பறவையைக் கொன்ற தந்தை - 8 மாத சிறை தண்டனை
அரபிக்கடலில் அனு ஆயுதம் கொண்ட நீர்மூழ்கிக் கப்பலை நிறுத்திய பிரட்டன் - பரபரப்பு தகவல்