ஒருவர் வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் தெரியுமா?
வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் என்பது பலரின் கேள்வியாக உள்ளது. வருமான வரித்துறை சட்டத்தின்படி, உரிய ஆவணங்கள் இருந்தால் தங்கம் வைத்திருக்க எந்த வரம்பும் இல்லை. ஆதாரங்கள் இல்லாதபட்சத்தில், அதற்கேற்ப அளவுகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருமணமான பெண்கள் 500 கிராம், திருமணமாகாத பெண்கள் 250 கிராம் வரை வைத்திருக்கலாம்.

Jewel
நாம் ஒவ்வொருவரும் வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்து இருக்கலாம் என்பதை பலரின் கேள்வியாக உள்ளது. இந்தியாவை பொருத்தவரை தங்கம் என்பது மிகப்பெரிய சேமிப்பு பொருளாக பார்க்கப்படுகிறது. நடுத்தர குடும்பங்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய நபர்கள் ஆகியோர் தங்கத்தை சிறிது சிறிதாக சேமித்து வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். தங்கம் நம்மை பொருத்தவரை செல்வத்தின் அடையாளமாகவும் கௌரவமாகவும் பார்க்கப்படுகிறது. எந்த ஒரு விழாவாக இருந்தாலும் நாம் தங்க நகைகளை பரிசாக வழங்கும் பழக்கம் இந்திய கலாச்சாரத்தின் ஒரு அங்கமாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் பலரும் ஒரு சவரன் தொடங்கி நூற்றுக்கணக்கான சவரன் வரை தங்க நகைகளை வீட்டில் வைத்திருப்பார்கள். இன்னும் சிலர் வங்கி பெட்டகத்தில் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். ஆனால் ஒரு வீட்டில் எவ்வளவு தங்கத்தை வைத்திருக்க வேண்டும் என்பது பற்றி பலருக்கும் தெரியவில்லை.
இது தொடர்பான சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வந்தாலும் அது சரிதானா என்பது மக்களிடையே குழப்பம் ஏற்பட்டு வருகிறது. ஆனால் வருமான வரி துறையின் அறிவுறுத்தலின் படி இந்தியாவில் வசிக்கும் ஒரு நபர் வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் என்பதற்கு சட்டப்படி உச்சவரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. உங்களிடம் எவ்வளவு தங்கம் இருந்தாலும் அதற்கான மூல ஆதாரத்தை ஆவணங்களுடன் நிரூபிக்க முடிந்தால் நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் சட்டப்படி வைத்திருக்கலாம், அது குற்றமாகாது.
Also Read: நகை வாங்கப்போறீங்களா? தங்கம் மற்றும் வைரத்தின் மதிப்பை எப்படி சரிபார்ப்பது?
தங்கம் வாங்கியதற்கான ரசீது பரிசாக பெற்றதற்கான கடிதம் பரம்பரை வழி வந்ததற்கான சான்றுகள் ஆகியவை சரியான அளவில் இருக்க வேண்டும். சிலர் தங்கத்தின் மூல ஆதாரத்துக்கான ஆவணங்களை வைத்திருக்காமல் இருக்கலாம். அத்தகைய சூழ்நிலையில் வருமான வரி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டால் சந்தேகம் எழலாம். அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வருமான வரித்துறையினர் வெளியிட்டுள்ளது.
அதாவது பாதுகாப்பான அளவு என அழைக்கப்படும் இந்த முறையில் திருமணமான பெண்கள் அதிகபட்சமாக 500 கிராம் அதாவது அறுபத்தி இரண்டரை பவுன் நகைகளும், திருமணமாகாத பெண்கள் 250 கிராம் அதாவது 31.25 கிராம் தங்கமும் வைத்திருக்கலாம். திருமணம் மற்றும் திருமணமாகாத ஆண்கள் 100 கிராம் அதாவது பன்னிரெண்டரை பவுன் தங்கம் வைத்து இருக்கலாம்.
Also Read: தங்கத்தில் இப்படி முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்.. வல்லுநர்கள் கூறும் சூப்பர் டிப்ஸ்!
இது வழக்கமான குடும்ப நகைகள் என கருதப்பட்டு வருமான வரி அதிகாரிகளால் அங்கீகரிக்கப்படும். மேலும் ஒரு குடும்பத்தில் எத்தனை நபர்கள் இருக்கிறார்களோ அதற்கு ஏற்ற அளவு அங்கீகரிக்கப்படும். இந்த அளவுகளுக்கு மேல் தங்கம் இருந்தால் அதனை வாங்கிய ஆதாரத்தை நிரூபிக்க முடியுமானால் என்ன சிக்கலும் கிடையாது. ஆனால் ஆவணங்கள் இல்லாமல் அதிக தங்கம் வைத்திருந்தால் அது கணக்கிடப்படாத வருமானம் என கருதப்பட்டு சட்டப்படி வருமானவரித்துறைகள் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த வகையில் நகைகள், நாணயங்கள், தங்க கட்டிகள் ஆகிய அனைத்தும் சேர்ந்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். திருமண நகைகளுக்கு ரசீது, போன்றவற்றில் பதிவுகளை வைத்திருப்பது மிகவும் நல்லது. மொத்தத்தில் ஒருவர் வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருந்தாலும் அதற்கான ஆதாரத்தை ஆவணங்களுடன் எப்போதும் வைத்திருந்தால் எந்தவித பிரச்சினையும் கிடையாது.