கரண்ட் அக்கவுண்ட் பற்றி தெரியுமா? அதன் நன்மைகள் என்ன?

All About Current Accounts : வங்கிகளில் கணக்கு துவங்கும்போது கரண்ட் அக்கவுண்ட் குறித்து கேள்விப்பட்டிருப்போம். இந்த கட்டுரையில் சேவிங்ஸ் அக்கவுண்ட் மற்றும் கரண்ட் அக்கவுண்ட்டிற்கு உள்ள வித்தியாசம் மற்றும் கரண்ட் அக்கவுண்ட்டின் நன்மைகள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கரண்ட் அக்கவுண்ட் பற்றி தெரியுமா? அதன் நன்மைகள் என்ன?

மாதிரி புகைப்படம்

Updated On: 

18 Aug 2025 16:22 PM

வங்கிகளில் (Bank) கணக்கு தொடங்கும்போது கரண்ட் அக்கவுண்ட், சேவிங்ஸ் அக்கவுண்ட் (Savings Account) என்ற இரண்டு ஆப்சன்களைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். இதே போலவே ஏடிஎம்களில் பணம் எடுக்கும்போது இந்த இரண்டு ஆப்சன்களை பார்த்திருப்போம். பெரும்பாலும் நாம் சேமிப்பு கணக்கு தான் பயன்படுத்துவோம் என்பதால் கரண்ட் அக்கவுண்ட் பற்றி நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு. ஒரு தொழில் தொடங்க நினைத்தால் முதலில் செய்ய வேண்டியது வங்கிகளில் கரண்ட் அக்கவுண்ட் ஒப்பன் செய்வது. சேமிப்பு கணக்குகளை விட, கரண்ட் அக்கவுண்ட் திறக்கும்போது நமக்கு கூடுதல் நன்மைகள் கிடைக்கும். அதன் விவரங்கள் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

கரண்ட் அக்கவுண்ட் என்பது என்ன?

கரண்ட் அக்கவுண்ட் என்பது பெரும்பாலும் வணிகர்கள், நிறுவனங்கள், தொழில்முனைவோர், கூட்டுறவுச் சங்கங்கள், அறக்கட்டளைகள் என அடிக்கடி பணப்பரிவர்த்தனை செய்ய வேண்டிய நபர்களுக்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சேமிப்பு கணக்குடன் ஒப்பிடுகையில், கரண்ட் அக்கவுண்ட் மூலம் அதிக அளவு பணப்பரிவர்த்தனை செய்யும் வாய்ப்பு, மேலும் அதிக அளவு பணம் அனுப்பலாம் மற்றும் பணம் பெறலாம். இது டிமாண்ட் டெபாசிட் அக்கவுண்ட் என்றும் அழைக்கப்படுகிறது.

இதையும் படிக்க : தனிநபர் கடன் Vs தங்க நகை கடன்?.. இந்தியாவில் நிதி தேவைக்கு எது சிறந்தது?

இதன் முக்கிய நன்மைகள்

கரண்ட் அக்கவுண்ட் ஒரு வியாபாரம் தொடங்கும் போது மிகவும் அவசியமானது. சேமிப்பு கணக்குடன் ஒப்பிடும்போது இது அதிக நிதி சுதந்திரம் மற்றும் வசதிகளை வழங்குகிறது.

  • இந்த மூலம் பெரிய அளவிலான பணப்பரிவர்த்தனைகளை செய்ய முடியும். அதே போலவே அடிக்கடி பணப்பரிவர்த்தனைகளை செய்யலாம்.
  • இது தொழில்முனைவோர் மற்றும் நிறுவனங்களுக்கு என பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இதன் மூலம் தொழில்முனைவோர் தங்கள் நிறுவனத்தின் வரவு செலவுகளை கவனிக்க தனியாக கணக்கு துவங்க முடியும்.
  • சுயதொழில் செய்பவர்களுக்கு கடன் பெறும்போது அதிக நன்மை கிடைக்கும்.
  • வியாபாரிகள் அடிக்கடி பணப்பரிவர்த்தனை செய்ய வேண்டியிருக்கும் என்பதால் அந்த நேரங்களில் இது நமக்கு கைகொடுக்கும்.
  • சில நேரங்களில் 24 மணி நேரமும் வங்கி சேவைகள் கிடைக்கும்.
  • மேலும் சில வங்கிகள் கரண்ட் அக்கவுண்டில் உள்ள இருப்பு தொகைக்கு வட்டி வழங்குகின்ரன.
  • செக், டிமாண்ட் டிராஃப்ட் போன்ற சேவைகள் முலம் பணம் செலுத்தலாம்.
  • சேமிப்பு கணக்குகளை விட அதிக செக் புக் பயன்பாடு கிடைக்கும்.
  • எஸ்எம்எஸ் மூலம் உடனுக்குடன் பரிவர்த்தனை நிலைகளை அறிந்துகொள்ளலாம்.

இதையும் படிக்க : இனி இறந்த நபரின் வங்கி கணக்கில் இருந்து எளிதாக பணம் பெறலாம் – ரிசர்வ் வங்கியின் புதிய நடைமுறை!

கரண்ட் அக்கவுண்டில் உள்ள குறைகள்

கரண்ட் அக்கவுண்ட்டை பொறுத்த வரை சேமிப்பு கணக்குகளை விட அதிக மினிமம் பேலன்ஸ் இருக்க வேண்டியிருக்கும். இதனை பராமரிக்காமல் விட்டால் கூடுதல் அபராதம் விதிக்கப்படும்.

கரண்ட் அக்கவுண்ட் துவங்க தேவையான ஆவணங்கள்

தனியார் நிறுவனங்கள், அறக்கட்டளைகள், சங்கங்கள் போன்றவைகள் இந்த கரண்ட் அக்கவுண்ட் துவங்கலாம். இதற்கு தேவையான ஆவணங்கள் குரித்து பார்க்கலாம்.

  • அடையாள அட்டை
  • முகவரி சான்று
  • பான் கார்டு
  • வணிக பதிவு ஆவணங்கள்

தொழில் துவங்க நினைப்பவர்கள் கரண்ட் அக்கவுண்ட் திறப்பது அவர்களுக்கு மிகவும் கைகொடுக்கும். இதன் மூலம் பணப்பரிவர்த்தனைகளின்போது சிக்கல் ஏற்படாமல் தடுக்க முடியும். மேலும் வரம்புகள் இன்றி அதிக பணம் அனுப்ப மற்றும் பெற முடியும்.