Loan Prepayment Plan : சாட்ஜிபிடி மூலம் கடனை முன்கூட்டியே அடைப்பது எப்படி?

ChatGPT Guide : சாட்ஜிபிடி போன்ற ஏஐ கருவிகளின் உதவியுடன் உங்கள் வருமானத்துக்கேற்ப லோனை சுலபமாக முன் கூட்டியே அடைக்கலாம். அதற்கு முதலில் நமது கடன் விவரங்களை சேகரிக்க வேண்டும். பின்னர் அந்த விவரங்களை சாட்ஜிபிடிக்கு அளித்தால் நமது கடனை எப்படி எளிதில் அடைப்பது போன்ற விவரங்களை நமக்கு அளிக்கும்.

Loan Prepayment Plan : சாட்ஜிபிடி மூலம் கடனை முன்கூட்டியே அடைப்பது எப்படி?

மாதிரி புகைப்படம்

Published: 

14 May 2025 19:30 PM

இன்றைய காலகட்டத்தில் வீட்டுக் கடன் (Home Loan), வாகனக் கடன், கல்விக் கடன் என ஏராளமான பொருளாதார தேவைகளுக்காக மக்கள் வங்கிக் கடன்களை வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இவை மாதாந்திர தவணைகளாக (EMI) செலுத்தப்படுவதால்,  அவை  வருமானத்தில் பெரும் பங்கை பிடித்துக்கொள்கின்றன. ஆனால், சிறிய முயற்சிகளின் மூலம் இந்த கடன்களை விரைவில் முடித்து விட முடியும். அதற்கான முக்கியமான வழிகளில் ஒன்றாக ப்ரீபேமெண்ட் பிளான் (Prepayment Plan) திட்டம் பார்க்கப்படுகிரது.  இப்போது, சாட்ஜிபிடி போன்ற ஏஐ டூல்களைப் பயன்படுத்தி, சுலபமாக ப்ரீபேமெண்ட் பிளானை எவ்வாறு எளிதில் செலுத்துவது என்பதை பார்க்கலாம்.

கடனின் விவரங்களைத் தயார் செய்யுங்கள்

முன்பணம் திட்டத்தை திட்டமிடும் முன், உங்கள் தற்போதைய கடன் பற்றிய முழுமையான தகவல்களைச் சேகரிக்க வேண்டும்

  • மொத்த கடன் தொகை (Principal)

  • வருடாந்த வட்டி விகிதம் (Interest Rate)

  • தவணை காலம் (Loan Tenure)

  • தற்போது செலுத்தும் மாத தவணை தொகை (EMI)

  • நீங்கள் முன்பணம் செலுத்தக்கூடிய தொகை (ஒரே தடவையாகவோ, மாதம் மாதமாகவோ)

சாட்ஜிபிடி மூலம் கணக்கிட வேண்டும்

மேலே உள்ள தகவல்களை சாட்ஜிபிடிக்கு கொடுத்து, நீங்கள் கேட்க வேண்டிய முக்கியமான கேள்விகளைப் பார்க்கலாம். உதாரணமாக ரூ.10 லட்சம் ஹோம் லோன், 8% வருட வட்டி, 20 வருட தவணை ஆகியவற்றை சமர்பித்து, மாதம் ரூ.20,000 முன்பணம் செலுத்தினால், கடனை எவ்வளவு விரைவில் முடிக்கலாம்? வட்டி எவ்வளவு குறையும்? என்ற கேள்விகளை கேளுங்கள்.

சாட்ஜிபிடிக்கு இதற்கு பதிலாக, நீங்கள் செலுத்தும் கூடுதல் தொகையால்

  • கடன் காலம் எவ்வளவு குறையும்.

  • வட்டியில் எவ்வளவு குறையும்.

  • உங்கள் மாத தவணை குறையுமா? அல்லது அதே மாத தவணையில் கடனை சீக்கிரம் முடிக்க முடியுமா?

என அனைத்தையும் கணக்கிட்டு தெளிவாக விளக்கும்.

வருமானத்திற்கு ஏற்ப திட்டமிடுங்கள்

ChatGPT வழங்கும் கணக்குகளை வைத்து, உங்கள் வருமானத்திற்கு ஏற்ப ஒரு திட்டத்தை உருவாக்கலாம்:

  • மாதந்தோறும் ரூ.5,000 அல்லது ரூ.10,000 கூடுதலாக செலுத்த முடியுமா?

  • ஆண்டுக்கு கூடுதலாக ரூ.50,000 அல்லது ரூ.1 லட்சம் செலுத்தலாமா?

  • சில மாதங்கள் கூடுதல் வருமானம் வந்தால், அதை முழுவதுமாக முன்பணம் செலுத்தலாமா?

இந்த கேள்விகளையும் ChatGPT-ஐ வைத்து கேட்டு, விருப்பத்திற்கேற்ப பல்வேறு திட்டங்களை உருவாக்கலாம். சாட்ஜிபிடி வழங்கும் தகவல்களை Excel அல்லது Google Sheets-ல் பதிவு செய்து அதற்கு ஏற்ப திட்டமிடுங்கள்.  சில நேரங்களில் சாட்ஜிபிடி போன்ற ஏஐ டூல்கள் நமக்கு நிதி ஆலோசகராகவும் செயல்படுகின்றன. சரியான தகவல்களை கொடுத்து, கடன் பயணத்தை விரைவாக முடிக்க, வட்டி செலவை மிச்சப்படுத்த சாட்ஜிபிடியை அணுகலாம்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)