இந்தியாவில் பெட்ரோல் தட்டுப்பாடு? வதந்திகளுக்கு மத்திய அரசு விளக்கம்

Government Clarifies Fuel Shortage Rumour : இந்தியாவில் 2 மாதங்களுக்குப் போதுமான எரிபொருள் கையிருப்புகள் உள்ளதாக அமைச்சகம் உறுதிப்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் பற்றாக்குறை நிலவுவதாகப் பரவி வரும் தகவல்களுக்கு மத்திய பெட்ரோலிய அமைச்சகம் பதிலளித்துள்ளது.

இந்தியாவில் பெட்ரோல் தட்டுப்பாடு? வதந்திகளுக்கு மத்திய அரசு விளக்கம்

மாதிரி புகைப்படம்

Updated On: 

26 Mar 2026 18:32 PM

 IST

நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் பற்றாக்குறை நிலவுவதாகப் பரவி வரும் தகவல்களுக்கு மத்திய பெட்ரோலிய அமைச்சகம் பதிலளித்துள்ளது. இது தொடர்பாக, அமைச்சகம் ஓர் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன் படி,  தற்போது இந்தியாவில் 2 மாதங்களுக்குப் போதுமான எரிபொருள் கையிருப்புகள் உள்ளதாக அமைச்சகம் உறுதிப்படுத்தியிருக்கிறது. இதனால் பெட்ரோல் , டீசல் தட்டுப்பாடு குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் கூறியுள்ளது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

பெட்ரோல் மற்றும் டீசல் பற்றாக்குறை நிலவுவதாகக் கூறும் சமூக ஊடகங்களில் பரவும் தகவல்களுக்கு மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் முழுமையாகப் பாதுகாப்பாகவும் சீராகவும் இருப்பதாக தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் நாடு முழுவதும் எங்கும் பெட்ரோல், டீசல் அல்லது எல்பிஜி சிலிண்டர்கள் ஆகியவற்றிற்கு தட்டுப்பாடு இல்லை என்றும், அனைத்த விற்பனை நிலையங்களும் போதுமான கையிருப்பு இருப்பதாகவும் அமைச்சகம் தெளிவு படுத்தியுள்ளது.  இதனால் எரிபொருள் தட்டுப்பாடு என பரவும் செய்திகள் முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றவை என்று அது திட்டவட்டமாகக் கூறியதுடன், தகவல்களுக்குப் பொதுமக்கள் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்புமாறும் அறிவுறுத்தியது.

இதையும் படிக்க : 10 கிலோவாக குறைக்கப்படும் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்?.. மத்திய அரசு விளக்கம்!

இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை

 

மேலும், தேவையில்லாத வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு அரசு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டதுடன், ஒவ்வொரு குடிமகனுக்கும் எரிபொருள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதில் தான் கொண்டுள்ள உறுதியை மீண்டும் வலியுறுத்தியது.

நான்காவது இடத்தில் இந்தியா

உலக அளவில், பெட்ரோலியச் சுத்திகரிப்புத் திறனில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது. மேலும், எரிபொருள் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியா 5வது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் விளைவாக, நாட்டின் உள்நாட்டு எரிபொருள் கையிருப்புகளும், பெட்ரோல் மற்றும் டீசல் கிடைப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. மேலும், எந்தவொரு சில்லறை விற்பனை நிலையத்திற்கும் எரிபொருள் விநியோகத்தை குறைக்குமாறு அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றும் பெட்ரோலிய தெளிவுபடுத்தியது.

இதையும் படிக்க : மார்ச் 31-க்குள் இவற்றை செய்யவில்லை என்றால் சிக்கல்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

சில நாடுகள் எரிபொருள் பற்றாக்குறையின் காரணமாகத் தேசிய அளவிலான எரிபொருள் அவசரநிலையை அறிவித்துள்ளது. ஆனால் இந்தியாவில் அத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான அவசியம் ஏற்படவில்லை என்றும் பிற நாடுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் வாங்குவதற்கு வரம்புகள் விதிக்கப்பட்டு வந்தாலும், இந்தியாவில் அத்தகைய சூழல் ஒருபோதும் ஏற்படாது என்றும் தெளிவுபடுத்தியது. சில பெட்ரோல் நிலையங்களில் மக்கள் பதற்றத்தின் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் வாங்கிச் சேமிக்க முற்படுவது, சமூக ஊடகங்களில் வேண்டுமென்றே பரப்பப்படும் தவறான தகவல்களின் தாக்கம் தான் காரணம் என்று பெட்ரோலிய அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

வாடிக்கையாளருக்கு தடையின்றி எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் பெட்ரோல் நிலையங்கள் திறம்படச் செயல்பட்டு வருவதாக அது உறுதிப்படுத்தியது. எரிபொருள் பற்றாக்குறை ஏதும் ஏற்படாமல் தடுக்கும் வகையில், பெட்ரோல் நிலையங்களுக்கு முன்பு ஒரு நாளாக வழங்கப்பட்டு வந்த கடன் கால அவகாசத்தை மூன்று நாட்களாக நீட்டிக்க எரிபொருள் நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய அரசு குறிப்பிட்டது.

Follow Us
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் வரவிருக்கும் மாற்றம்
தாய், மகளைக் கடித்து குதறிய வளர்ப்பு நாய்.. வேடிக்கை பார்த்த உரிமையாளர்கள்..
ஏப்ரல் 1 முதல் உங்கள் சம்பளம் மாறப்போகிறது!.. புதிய விதிகள், வரி மாற்றங்கள்..
இனி இரவிலும் சூரிய ஒளியை பெறலாம்.. விண்வெளியில் கண்ணாடி அமைக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனம்..