இன்றிரவே ஒரு நாகரிகம் அழியும்.. அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை, ஈரான் கொடுத்த பதிலடி!

அமெரிக்கா மற்றும் பிராந்திய நாடுகள் 45 நாள் போர்நிறுத்தத்திற்காக முயற்சி செய்து வருகின்றன. இது நிரந்தர சமாதானத்திற்கு வழிவகுக்கும் என கருதப்படுகிறது. ஆனால் இதுவரை பெரிதான முன்னேற்றம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க துணை அதிபர் ஜே.டி வேன்ஸ், “அமெரிக்கா தனது போர் இலக்குகளை நிறைவேற்றியுள்ளது. இனி முடிவு எடுப்பது ஈரானின் கையில் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இன்றிரவே ஒரு நாகரிகம் அழியும்.. அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை, ஈரான் கொடுத்த பதிலடி!

கோப்பு புகைப்படம்

Updated On: 

07 Apr 2026 19:19 PM

 IST

ஏப்ரல் 7, 2026: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். “இன்றிரவே ஒரு முழு நாகரிகம் அழிந்துவிடும்” என்று அவர் தெரிவித்துள்ளார். Truth Social சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “அது நடக்க நான் விரும்பவில்லை, ஆனால் அது நடக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது” என்றும் குறிப்பிட்டார். “ஒரு முழு நாகரிகம் இன்றிரவே அழிந்துவிடும். அது மீண்டும் ஒருபோதும் திரும்ப வராது. அது நடக்க நான் விரும்பவில்லை, ஆனால் அது நடக்கும் போலிருக்கிறது,” என அவர் பதிவிட்டார். இந்த தருணம் உலக வரலாற்றில் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும் என்றும், கடந்த 47 ஆண்டுகளாக நடந்துவரும் மிரட்டல், ஊழல் மற்றும் வன்முறைக்கு இது முடிவாக அமையும் என்றும் அதிபர் ட்ரம்ப் கூறினார்.

அதே நேரத்தில், “ஏதாவது புரட்சிகரமான நல்ல மாற்றமும் நிகழலாம்” எனவும் அவர் கூறி பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பை திறந்துவைத்தார்.

சமாதான முயற்சிகள்:

The Wall Street Journal வெளியிட்ட தகவலின்படி, அமெரிக்கா மற்றும் பிராந்திய நாடுகள் 45 நாள் போர்நிறுத்தத்திற்காக முயற்சி செய்து வருகின்றன. இது நிரந்தர சமாதானத்திற்கு வழிவகுக்கும் என கருதப்படுகிறது. ஆனால் இதுவரை பெரிதான முன்னேற்றம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க துணை அதிபர் ஜே.டி வேன்ஸ், “அமெரிக்கா தனது போர் இலக்குகளை நிறைவேற்றியுள்ளது. இனி முடிவு எடுப்பது ஈரானின் கையில் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

ஈரானின் பதில்:

இதற்கு பதிலளித்த ஈரான், “நீங்களும் உங்கள் கூட்டாளிகளும் ஈரானின் தொன்மையான நாகரிகத்திடமிருந்து மறக்க முடியாத தாக்குதலை சந்திப்பீர்கள்” என்று எச்சரித்துள்ளது. காலக்கெடு நெருங்கும் நிலையில், அமெரிக்காவுடன் உள்ள அனைத்து பேச்சுவார்த்தை வழிகளையும் முடக்கியதாக ஈரான் தெரிவித்துள்ளது.

போர் குற்றச்சாட்டு விவகாரம்:

போர் குற்றச்சாட்டுகள் குறித்து கவலை இல்லை என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் ஹோர்முஸ் நீரிணையை திறக்காவிட்டால், அதன் கட்டமைப்பு வசதிகளை அழிக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

இதற்கிடையில், ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் அண்டோனியோ, பொதுமக்கள் பயன்படுத்தும் கட்டமைப்புகளை தாக்குவது சர்வதேச சட்டத்திற்கு எதிரானது என்று தெரிவித்துள்ளார். ஈரான், அமெரிக்காவின் அழுத்தத்தை நிராகரித்து, தற்காலிக போர்நிறுத்தம் அல்ல, முழுமையான போர் முடிவை தான் விரும்புகிறது என தெரிவித்துள்ளது.

கார்க் தீவில் தாக்குதல்:

ஹோர்முஸ் நீரிணை அருகே உள்ள முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான Kharg Island பகுதியில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் இணங்கவில்லை என்றால், அதன் மின்சாரம் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்களை குறிவைத்து மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்று ட்ரம்ப் எச்சரித்துள்ளார். மேலும், அமெரிக்க ராணுவம் அந்த தீவில் உள்ள ராணுவ இலக்குகளை ஏற்கனவே தாக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow Us
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
ஆர்தமெஸ் 2 எடுத்த முதல் படத்தை பகிர்ந்த நாசா
புதிய கப்பல் வழித்தடம் - முடிவுக்கு வரும் எரிபொருள் பற்றாக்குறை
கேஸ் சிலிண்டருக்காக 40 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை - என்ன நடக்கிறது?