அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டமில்லை.. ஈரான் திட்டவட்டம்!

Iran Not Ready To Talk With Iran | இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக அமெரிக்கா தெரிவித்தது. ஆனால், அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் இல்லை என ஈரான் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டமில்லை.. ஈரான் திட்டவட்டம்!

மாதிரி புகைப்படம்

Published: 

02 Mar 2026 15:54 PM

 IST

ஈரான், மார்ச் 02 : பிப்ரவரி 28, 2026 அன்று இஸ்ரேல் (Israel) மற்றும் அமெரிக்கா (America) இணைந்து ஈரான் (Iran) மீது தாக்குதல் நடத்திய நிலையில், தற்போது மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த பதற்றம் இன்னும் சில வாரங்களுக்கு நீடிக்கும் நிலை உள்ள நிலையில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக இல்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் விதமாக அமைந்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் தயாராக இல்லை என கூறியுள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஈரான் மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்கா, இஸ்ரேல்

அணு ஆயுதங்களை தயாரிப்பது தொடர்பாக அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு ஈரான் உடன் மோதல் போக்கு நிலவி வந்த நிலையில், பிப்ரவரி 28, 2026 அன்று இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இரு நாடுகளும் தொடர்ந்து நடத்திய தாக்குதலில் ஈரானின் உட்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமனேயி கொல்லப்பட்டார். இது ஈரானை கடும் ஆத்திரத்திற்கு உள்ளாக்கியது. இதன் காரணமாக ஈரான் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறி வைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதையும் படிங்க : ஈரானின் கடற்படை முற்றிலும் அழிக்கப்படும்.. டிரம்ப் பரபரப்பு பதிவு!

4 வாரங்கள் போர் நீடிக்கும் என தெரிவித்த டிரம்ப்

அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து தொடர்ந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரான் மீதான ராணுவ நடவடிக்கை இன்னும் நான்கு வாரங்களுக்கு நீடிக்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த தாக்குதல் தற்காலிகமானது அல்ல. அமெரிக்காவின் அனைத்து இலக்குகளும் எட்டப்படும் வரை போரின் வேகம் குறையாது என்று டிரம்ப் கூறியிருந்தார். மேலும், ஈரான் ராணுவம் புரட்சிகர காவல்படை மற்றும் போலீசார் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும். இல்லையென்றால் மரணத்தை எதிர்க்கொள்ள நேரிடும். ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம். ஈரான் எங்களுடன் பேச தயாராக உள்ளது என டிரம்ப் தெரிவித்தார்.

இதையும் படிங்க : S Israel Iran War Live : தொடரும் மேற்கு ஆசியா போர் பதட்டம்.. துபாய், குவைத் மீது ஈரான் தாக்குதல்

அமெரிக்கா ஈரான் உடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக கூறியுள்ள நிலையில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் இல்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானின் உயர் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

Follow Us
இஸ்ரேலில் முதன்முறையாக F-22 போர் விமானங்களை களமிறக்கிய அமெரிக்கா
பயணிகள் விமான டிக்கெட்டை ரத்து செய்தால் அபராதம் கிடையாது - டிஜிசிஏ அறிவிப்பு
சாலை விபத்துகளை குறைக்க புதிய ஓட்டுநர் உரிமம் - நிதின் கட்கரி அறிவிப்பு
பழைய ரூபாய் நோட்டுகளை கண்டுபிடித்த பெண் - வைரலாகும் வீடியோ