போர் பதற்றம்.. இந்தியாவுக்கு ஆதரவு… பாகிஸ்தானுக்கு அட்வைஸ் கொடுத்த அமெரிக்கா!
India Pakistan Conflict : போர் பதற்றத்தை தணிக்க வழிமுறைகளை கண்டறியும்படி, பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அறிவுரை வழங்கியுள்ளது. பாகிஸ்தான் ராணுவத் தளபதியுடன் அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ பேச்சு வார்த்தை நடத்திய நிலையில், அறிவுறுத்தியுள்ளார். மேலும், பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கான உதவிகளை அமெரிக்கா செய்யவும் தயார் எனவும் கூறியுள்ளார்.

அமெரிக்கா, மே 10: இந்தியாவுடன் மோதலை தவிர்க்க வேண்டும் என பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீருக்கு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. மேலும், இருநாடுகளும் (India Pakistan tension) பதற்றத்தை தணிப்பதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும், எதிர்கால மோதல்களை தவிர்க்க ஆக்கபூர்வமாக பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க உதவும் எனவும் கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க திட்டமிட்டு வந்த, இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்பதை தொடங்கியது.
இந்தியாவுக்கு ஆதரவு
ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் மற்றும் காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக தெரிகிறது.
ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியாக 2025 மே 7ஆம் தேதி இரவு பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலை நடத்தியது. காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய இடங்களில் 15க்கும் மேற்பட்ட இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. ஆனால், இதனை இந்தியா நடுவானிலையே முறியடித்தது.
அதைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் போர் சூழல் நிலவுகிறது. இருநாடுகளுக்கு ஒன்றுக்கொன்று தொடர் தாக்குதல், பதிலடியில் ஈடுபட்டு வருகிறது. 2025 மே 10ஆம் தேதியான காலையில் கூட, பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலை நடத்தியது. பஞ்சாப், காஷ்மீர் நோக்கி ட்ரோன் தாக்குதலை நடத்தியது. ஆனால், அனைத்தையுமே இந்திய சுட்டு வீழ்த்தியது.
பாகிஸ்தானுக்கு அட்வைஸ் கொடுத்த அமெரிக்கா
இரு நாடுகளின் நடவடிக்கையை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகிறது. குறிப்பாக, அமெரிக்கா இதுகுறித்து தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. இருநாடுகளின் பதற்றத்தை தணிக்க விரும்புவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். இப்படியான சூழலில், இந்தியாவுடன் மோதலை தவிர்க்க வேண்டும் என பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீருக்கு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீருடன் பேசியுள்ளார். அப்போது, இந்தியாவுடனான மோதல் தணிக்க பாகிஸ்தானிடம் கூறியிருக்கிறார். மேலும், இருநாடுகளும் அமைதியை உருவாக்கும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அமைதிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்க செய்யும் எனவும் மார்கோ ரூபியோ கூறியுள்ளார்.
முன்னதாக, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் ஆகியோருடன் தனித்தனியாக மார்கோ ரூபியோ பேசினார். அப்போது, பதற்றத்தைத் தணிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை பாகிஸ்தான் எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். இந்த நிலையில், மீண்டும் பாகிஸ்தானிடம் போர் பதற்றம் குறித்து வலியுறுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.