கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் கார்வார் கடற்கரை பகுதியில், ஜிபிஎஸ் டிராக்கர் பொருத்தப்பட்ட வெளிநாட்டு கடல் புறா ஒன்று, காயமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கார்வாரில் உள்ள ரவீந்திரநாத் தாகூர் கடற்கரையில், காவல்துறையினர் அந்த கடல் புறாவைக் கண்டுபிடித்து, வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். காயமடைந்த அந்தப் பறவையை பரிசோதித்த அதிகாரிகள், அதன் உடலில் ஜிபிஎஸ் டிராக்கிங் சாதனம் பொருத்தப்பட்டிருந்ததை கண்டறிந்தனர். அந்த சாதனத்தில், சோலார் பேனல் உடன் கூடிய மின்னணு உபகரணம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.