இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு!
Trump Spoke About Deal With India | விரைவில் இந்தியா உடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நேற்று (நவம்பர் 11, 2025) வெள்ளை மாளிகையில் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
வாஷிங்டன், நவம்பர் 12 : உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் (Ukraine Russia War) சுமார் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (America President Donald Trump) மத்தியஸ்தம் செய்து வருகிறார். ஆனால், போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா விருப்பாம் காட்டாமலே உள்ளது. இதனால் கடும் கோபத்திற்கு உள்ளான டிரம்ப், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் (Crude Oil) பெறும் ஆசிய நாடுகளான இந்தியா (India), சீனா (China) மீது கடுமையான வரிவிதிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார். குறிப்பாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பதாக அவர் அறிவித்தார்.
இந்தியா – அமெரிக்கா இடையே தொடர்ந்து நடைபெறும் வர்த்தக பேச்சுவார்த்தை
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைக்க வேண்டும் என டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தான் அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதாவது இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தகம் தொடர்பாக இதுவரை ஐந்து சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்துள்ளன.
இதையும் படிங்க : இந்தோனேசியா பள்ளி மசூதியில் குண்டு வெடிப்பு.. 55 மாணவர்கள் காயம்.. அதிர்ச்சி சம்பவம்!




இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட வரி குறைக்கப்படும் – டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க வெள்ளை மாளிகையில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக செர்ஜியா கோர் நேற்று (நவம்பர் 11, 2025) பதவியேற்றார். அப்போது இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசிய டிரம்ப், அரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியாவுக்கு அதிக வரி விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா பெருமளவு குறைத்துள்ளது. எதாவது ஒரு கட்டத்தில் இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட வரி குறைக்கப்படும்.
இதையும் படிங்க : ரஷ்யாவில் காணாமல்போன இந்திய மாணவர்… 19 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு – என்ன நடந்தது?
இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.