இந்தியா மீது அமெரிக்கா 50% வரி விதிக்க இதுதான் காரணம்.. வெள்ளை மாளிகை பத்திரிக்கை செயலாளர் விளக்கம்!

US Imposes 50 Percentage Tariff on India | இந்தியா மீது 50 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தான் இந்தியாவுக்கு வரி விதித்தாக வெள்ளை மாளிகையின் பத்திரிக்கை செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்தியா மீது அமெரிக்கா 50% வரி விதிக்க இதுதான் காரணம்.. வெள்ளை மாளிகை பத்திரிக்கை செயலாளர் விளக்கம்!

கரோலின் லீவிட்

Updated On: 

20 Aug 2025 11:46 AM

வாஷிங்டன், ஆகஸ்ட் 20 : இந்தியா (India) மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (America) 50 சதவீதம் வரி (50% Tariff) விதித்தது உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுப்பதை கண்டிக்கும் விதமாக மேற்கொண்ட நடவடிக்கை என வெள்ளை மாளிகையின் பத்திரிக்கை செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார். இந்த முடிவு மாஸ்கோவுக்கு இரண்டாம் கட்ட அழுத்தத்தை கொடுக்கும் விதமாக எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில், இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்தது குறித்து கரோலின் லீவிட் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியா மீது 50 சதவீதம் வரி விதித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாகவும் அதன் காரணமாக, அமெரிக்காவும் அந்த நாடுகளுக்கு அதே அளவு வரி விதிப்பதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இதனை தொடர்ந்து இந்தியாவுக்கு 25 சதவீதம் வரி விதித்த டிரம்ப், அதனை இரு மடங்காக உயர்த்தி அறிவித்தார். அதாவது, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்து உத்தரவிட்டார்.  டிரம்பின் இந்த முடிவு இந்தியாவில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க : உக்ரைனில் அமைதியை கொண்டு வரும் என நம்புகிறேன்.. டிரம்ப் உடனான பேச்சுவார்த்தை குறித்து பேசிய புதின்!

இந்தியா மீது 50% வரி விதித்ததற்கு இதுதான் காரணம் – கரோலின் லீவிட்

இந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 19, 2025) வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த பத்திரிக்கை செயலாளர் கரோலின் லீவிட் உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரை நிறுத்துவதின் டிரம்ப் தீவிரமாக உள்ளார். டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை வெள்ளை மாளிகையில் வைத்து சந்தித்தார். அதற்கு முன்னதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினையும் அவர் வெள்ளை மாளிகையில் வைத்து சந்தித்தார். அவர்கள் இருவரும் சந்தித்து பேச சம்மதம் தெரிவித்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : Donald Trump : இந்தியா மீது 50% வரி விதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.. முழு விவரம்!

டிரம்ப் இந்த போரை எவ்வளவு விரைவாக முடிக்க முடியுமோ அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். போரை நிறுத்துவதற்கான சிறந்த முதல் படி இது என உலக தலைவர்கள் கூறியுள்ளனர். இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேசுவது சிறப்பானது. அது விரைவில் நடைபெறும் என டிரம்ப் எதிர்ப்பார்க்கிறார் என்று அவர் கூறியுள்ளார்.