ஃபாசிஸ்ட் என கூறியது குறித்து கிண்டல் செய்த டிரம்ப்.. மம்தானி – டிரம்ப் சந்திப்பில் சிரிப்பலை!
Donald Trump Meets Zohran Mamdani | தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருந்தது படியே அமெரிக்க அதிபர் டிரம்ப், நியூயார்க்கின் புதிய மேயராக பதவியேற்றுள்ள சோரன் மம்தானியை சந்தித்து பேசினார். அப்போது அவரின் கருத்து குறித்து டிரம்ப் கிண்டல் செய்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மம்தானி - டிரம்ப் சந்திப்பு
வாஷிங்டன், நவம்பர் 22 : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (America President Donald Trump) மற்றும் நியூயார்க் மாகாணத்தின் புதிய மேயராக பதவி ஏற்ற சோரன் மம்தானி (Zohran Mamdani) ஆகியோருக்கு இடையே கடுமையான வார்த்தை போர் நீடித்து வந்தது. இந்த நிலையில், அவர்கள் இருவரும் நேற்று (நவம்பர் 21, 2025) வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் சந்தித்து பேசினர். இந்த நிலையில், அவர்கள் இருவருக்கும் இடையே சுவாரஸ்யமான உரையாடல் நடைபெற்றது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. அந்த வகையில் மம்தானி தன்னை ஃபாசிஸ்ட் (Fascist) என கூறியதை டிரம்ப் கிண்டல் செய்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
டொனால்ட் டிரம்ப் – சோரன் மம்தானி சந்திப்பு
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தின் புதிய மேயராக கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சோரன் மம்தானி வெற்றி பெற்றார். அதனை தொடர்ந்து மேயராக பதவி ஏற்ற பிறகு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அப்போது அவர் டிரம்பை ஃபாசிஸ்ட் எனவும் குறிப்பிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டிரம்ப், மம்தானிக்கு பதில் அளித்து பேசினார். இதன் காரணமாக இருவருக்கும் இடையே வார்த்தை போர் நீடித்து வந்தது.
இதையும் படிங்க : டெல்லி கார் குண்டு வெடிப்பை நடத்தியதே நாங்கள் தான்.. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் பகீர் பேச்சு!
சோரன் மம்தானியை கிண்டல் செய்த டிரம்ப்
“That’s okay. You can just say yes. It’s easier than explaining it. I don’t mind.” 🤣🤣🤣 pic.twitter.com/5NpLP6v3gZ
— Rapid Response 47 (@RapidResponse47) November 21, 2025
சோரன் மம்தானி தன்னை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அதன்படி இருவரும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருந்தார். அதன்படி, நேற்று (நவம்பர் 21, 2025) வெள்ளை மாளிகையில் டிரம்ப் மற்றும் மம்தானி செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்டனர். அப்போது டிரம்ப் மீதான கருத்தியலை நீங்கள் மாற்றிக்கொள்ள போவதில்லையா என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு மம்தானி பதில் அளிக்க தொடங்கிய நிலையில் குறுக்கிட்ட டிரம்ப், அது பரவாயில்லை. நீங்கள் ஆம் என்று சொல்லுங்கள். அது நீங்கள் விளக்கம் அளிப்பதை விட எளிதானது. நான் அது குறித்து கவலைப்பட மாட்டேன் என்று கிண்டலாக கூறியுள்ளார்.