ஷேக் ஹசீனாவை நாடு கடத்த தீவிர முயற்சி: இண்டர்போல் உதவியை நாடும் முடிவில் வங்கதேசம்!
EX PM Sheikh Hasina: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு "மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக" மரண தண்டனை விதிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள அவரை, நாடு கடத்த அந்நாட்டு சார்பில் பல்வேறு கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வங்கதேசம், நவம்பர் 19,2025: ஷேக் ஹசீனாவை நாடு கடத்த இன்டர்போலை நாடுவதற்கான முடிவில் உள்ளதாக வங்கதேச ஊடகங்களால் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுசமான் கான் கமால் ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதித்தது. இதைத்தொடர்ந்து, வங்கதேசத்தில் உள்ள முகமது யூனுஸின் இடைக்கால அரசு, ஷேக் ஹசீனா மற்றும் அசாதுஸ்மான் கான் கமால் ஆகியோரை இந்தியாவிலிருந்து நாடு கடத்த இன்டர்போலின் உதவியை நாடத் தயாராகி வருகிறது. ஏற்கெனவே, இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள ஷேக் ஹசீனாவை உடனடியாக வங்கதேசத்திற்கு அனுப்ப வேண்டும் என அந்நாட்டு தரப்பில் இந்தியாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை..
உயர் பாதுகாப்பில் ஷேக் ஹசீனா:
ஷேக் ஹசீனா ராஜினாமா செய்யக்கோரி, ஜூலை-ஆகஸ்ட் 2024ல் மாணவர்கள் நடத்திய கிளர்ச்சியின் காரணமாக அவர் இந்தியாவுக்கு தஞ்சம் புகுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடயே, ஊடகங்களிடம் பேசி வரும் அசாதுஸ்மான் கான் கமல், தான் எங்கு இருக்கிறேன் என்பது குறித்த தகவல்களை கூற மறத்து வருகிறார். ஆனால், அவரும் இந்தியாவிலே உயர் பாதுகாப்பு வளையத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இருவருக்கு மரண தண்டனை:
மனிதத்தன்மைக்கு எதிரான ஐந்து குற்றச்சாட்டுகளில் அவர்கள் இருவரும் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். மாணவர் போராட்டக்காரர்களை அடக்குவதற்காக ஹெலிகாப்டர், ட்ரோன் மற்றும் உயிர்கொள்ளும் ஆயுதங்களைப் பயன்படுத்த உத்தரவிட்டதாகவும், கடுமையான பேச்சுகள் மூலம் சூழ்நிலையைத் தூண்டியதாகவும் கூறி இயற்கை மரணம் வரை சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. அதேசமயம், இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்றொருவரான முன்னாள் காவல் துறைத் தலைவர் சௌதரி அப்துல்லா அல்-மமூன், அப்ரூவராக மாறியதால் 5 ஆண்டு சிறை தண்டனை மட்டும் அளிக்கப்பட்டுள்ளது.
30 நாட்களுக்குள் சரணடைய வேண்டும்:
அதோடு, தண்டனை வழங்கப்பட்ட 30 நாட்களுக்குள் ஹசினாவும், கமாலும் சரணடையாவிட்டாலோ அல்லது கைது செய்யப்படாவிட்டாலோ தீர்ப்பை எதிர்த்து அவர்களால் மேல்முறையீடு செய்ய முடியாது. அதனால், இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள அவர்கள் இருவரும் என்ன முடிவு செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இதுகுறித்து வழக்கறிஞர் எம்.எச்.தாமீம் கூறும்போது, தலைமறைவாக இருக்கும் இருவரையும் கைது செய்ய இன்டர்போல் மூலம் ரெட் நோட்டீஸ் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகக் கூறினார். அதோடு, ஹசினா, கமால் ஆகிய இருவரையும் நாடு கடத்த விரைவில் வங்கதேசம் அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பும் என்றும் தெரிவித்தார்.
மேலும் படிக்க: ஹஜ் பயணிகள் பேருந்து எரிந்து விபத்து.. 42 இந்தியர்கள் பலி என தகவல்!
இதனிடையே, இந்தியா இவ்விவகாரத்தில், அண்டை நாட்டின் அமைதி, ஜனநாயகம் மற்றும் நிலைத்தன்மையை கருத்தில் கொண்டு, அனைத்து தரப்புகளுடனும் சுமூகமான முறையில் செயல்படுவோம் என வாக்குறுதி வழங்கியுள்ளது.



