Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

India Vs Pakistan : இந்தியா – பாகிஸ்தான் விவகாரம்.. இந்தியாவுக்கு ஆதரவாக பேசிய ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ்!

Russian Ambassador to India Denis Alipov Express Support to India | பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் பயங்கரவாதத்தை கண்டித்து பாகிஸ்தானுக்கு எதிராக உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தன. அந்த வகையில், இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் இந்தியாவுக்கான ஆதரவு குறித்து பேசியுள்ளார்.

India Vs Pakistan : இந்தியா – பாகிஸ்தான் விவகாரம்.. இந்தியாவுக்கு ஆதரவாக பேசிய ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ்!
டெனிஸ் அலிபோவ்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 28 May 2025 19:16 PM

டெல்லி, மே 28 : 2025, ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் (Pahalgam) நடத்தப்பட்டது கொடூரமான தாக்குதல் என்று இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் தெரிவித்துள்ளார். இந்தியா – பாகிஸ்தான் (India – Pakistan) விவகாரத்தில் தங்களது நிலைப்பாட்டையும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், இந்தியா – பாகிஸ்தான் விவகாரம் குறித்தும், அது குறித்த ரஷ்யாவின்  நிலைப்பாடு குறித்தும் அவர் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள்

ஜம்மு மற்றும் காஷ்மீரின் (Jammu and Kashmir) பஹல்காம் (Pahalgam) பகுதியில் ஏப்ரல் 22, 2025 அன்று சுற்றுலா பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொடூர துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த பயங்கரவாத தாக்குதல் உலகையே உலுக்கிய நிலையில், ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) மூலம் பாகிற்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது.

ஆபரேஷன் சிந்தூரில் இந்திய அரசு பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொலை செய்யப்பட்டனர். இதற்கு பாகிஸ்தானும் பதில் தாக்குதல் நடத்திய நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நிலவியது. இதனை தொடர்ந்து இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வந்த நிலையில், மே 10, 2025 அன்று போர் ஒப்பந்தம் அமலுக்கு வந்த நிலையில் இரு நாடுகளும் தாக்குதல்களை நிறுத்தின.

இந்தியாவுக்கு ஆதரவாக பேசிய ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ்

இந்தியா – பாகிஸ்தான் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக சில நாடுகளும், பாகிஸ்தானுக்கு ஆதரவாக சில நாடுகளும் குரல் கொடுத்து வந்தன. இந்த நிலையில் , இன்று (மே 28, 2025) நேரலை நிகழ்ச்சியில் பேசிய இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ், ஏப்ரல் 22, 2025 அன்று நடைபெற்றது கொடூரமான தாக்குதல். இது கண்டனத்திற்கு உள்ளானது. இந்த விவகாரத்தில் ரஷ்ய அதிபர் புதின் உட்பட ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்த விவகாரம் குறித்து தகவல் அறிந்த உடன் ரஷ்ய அதிபர் புதின் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, தண்டிக்கப்படுவார்கள் என்று கூறியிருந்தார். அதை தான் இந்தியாவும் செய்தது. பயங்கரவாதத்தை பொருத்தவரை இரண்டு நிலைப்பாடுகள் இருக்காது என்பதில் நாங்கள் எப்போதும் உறுதியாக இருக்கிறோம் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.