அமெரிக்காவின் 50 சதவீத வரி.. இந்தியாவுக்கு ஆதரவாக வந்த குரல்.. களமிறங்கிய சீனா!

China On America Tariffs : இந்தியா மீது அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்புக்கு சீனா எதிர்ப்பு குரல் எழுப்பியுள்ளது. அதாவது, அமைதியாக இருந்தால் அமெரிக்காவின் கொடுமை அதிகரிக்க செய்யும் எனவும் இந்தியாவுன் சீனாவும் எதிரிகள் அல்ல. கூட்டாளிகள் எனவும் அவர் சீனா விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் 50 சதவீத வரி.. இந்தியாவுக்கு ஆதரவாக வந்த குரல்.. களமிறங்கிய சீனா!

Pm Modi China President

Updated On: 

22 Aug 2025 09:33 AM

டெல்லி, ஆகஸ்ட் 22 :  இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீத வரி (US Tariffs) விதித்ததற்கு சீனா (India China Relation) எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்காவின் கொடுமை அதிகரிக்கக் கூடாது எனவும், இந்தியா உடன் துணை நிற்போம் என்றும் சீனா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப்  (Donald Trump) பதவியேற்றத்தில் அதிரடி நடவடிக்கைளை எடுத்து வருகிறார். குறிப்பாக, பல்வேறு நாடுகள் மீது வரிகளை விதித்து வருகிறது. அப்படி தான், இந்தியா மீதும் அமெரிக்கா 50 சதவீத வரி விதித்தது. இது இரண்டு நாடுகளுக்கு இடையே வர்த்தக மோதலாக மாறியது. இதற்கு அமெரிக்காவுக்கு எதிராக பல நாடுகள் குரல் கொடுத்து வருகின்றனர். அதாவது, அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரியை முதலில் டிரம்ப் அறிவத்தார்.

அந்த வரியும் 2025 ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. தொடர்ந்து, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை சுட்டிக்காட்டி, மேலும், இந்தியா மீது 25 சதவீத வரியை அறிவித்தார். இந்த 25 சதவீத வரி 2025 ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இதன் மூலம், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்க வேண்டி உள்ளது. இதற்கு பல நாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இப்படியான சூழலில், தற்போது அமெரிக்காவின் வரி விதிப்புக்கு சீனா குரல் கொடுத்துள்ளது. இந்த நிலையில், டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்தியாவுக்கான சீன தூதர் ஷு ஃபெய்ஹாங் அமெரிக்காவின் வரிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Also Read : அமெரிக்க அதிபருடன் நடந்த பேச்சுவார்த்தை.. பிரதமர் மோடியிடம் விளக்கிய அதிபர் புதின்..

இந்தியாவுக்கு ஆதரவாக பேசிய சீனா


அவர் பேசுகையில், “அமெரிக்கா நீண்ட காலமாக வர்த்தக்கத்தால் பயனடைந்துள்ளது. ஆனால் இப்போது பல்வேறு நாடுகளிடமிருந்து அதிக விலைகளைக் கோருவதற்கு வரிகளை பேரம் பேசுகிறது. இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்தது. மேலும், அதிகரிக்கலாம் என அச்சுறுத்துகிறது. சீனா அதனை கடுமையாக எதிர்க்கிறது.

சீனா இந்தியாவுடன் துணையாக நிற்கும். அமைதியாக இருப்பது கொடுமைகளை இன்னும் அதிகரிக்க தான் செய்யும். அமைதி கொடுமைப்படுத்துபவருக்கு தைரியத்தை மட்டுமே தருகிறது. உலக வர்த்தகத்துடன் பலதரப்பு வர்த்தக அமைப்பை நிலைநிறுத்த சீனா இந்தியாவுடன் உறுதியாக நிற்கும். சீனா மற்றும் இந்தியாவின் நட்பு ஆசியாவிற்கு நன்மை பயக்கும். இந்தியாவும் சீனா எதிரிகள் அல்ல.  நாங்கள் கூட்டாளிகள்.

Also Read : என்னது! டிரம்ப்பை சந்தித்து ரஷ்ய அதிபர் புதின் இல்லையா? அவரைப் போன்ற வேறு நபரா?

ஆசியாவின் பொருளாதார வளர்ச்சியின் இரட்டை இயந்திரங்கள் நாங்கள். உலகளாவிய ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கு இரண்டு தெற்காசிய நாடுகளும் ஒத்துழைப்பது உலகத்தை மேம்படுத்துவதில் இந்தியாவும் சீனாவும் முன்னணியில் இருக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. சீன சந்தையில் அதிக இந்திய பொருட்கள் நுழைவதை நாங்கள் வரவேற்போம்” என்றார்.