உறைய வைக்கும் பனி.. பனி கட்டிகள் மீது படுத்து விளையாடும் ரஷ்ய மக்கள்!
Russians Playing Ice Floating Game | ரஷ்யாவில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. அங்கு தற்போது வெப்பநிலை மைனஸில் சென்றுள்ள நிலையில், அங்கு நீர்நிலைகள் பனியின் காரணமாக உறைந்துள்ளன. அந்த பனிக்கட்டிகளில் பொதுமக்கள் ஐஸ் ஃப்ளோட்டிங் விளையாட்டு விளையாடி வருகின்றனர்.

ஐஸ் கட்டிகளில் விளையாடும் ரஷ்யர்கள்
மாஸ்கோ, பிப்ரவரி 04 : உலகின் பல்வேறு பகுதிகளில் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதன் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பொதுமக்கள் வெளியே வராமல் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இந்த நிலையில், ரஷ்யாவின் (Russia) மாஸ்கோ (Moscow) பகுதியில் மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும் நிலையில், அங்கு உறைந்த பனிக்கட்டிகள் மீது ஏறி பொதுமக்கள் ஐஸ் ஃப்ளோட்டிங் (Ice Floating) விளையாட்டை விளையாடி வருகின்றனர். இந்த நிலையில், ரஷ்யாவில் நிலவும் கடும் பனிப்பொழிவு குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஐஸ் ஃப்ளோட்டிங் விளையாட்டில் ஆர்வம் கொண்டுள்ள ரஷ்ய மக்கள்
ரஷ்யாவில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்த நிலையில், தற்போது ரஷ்யாவின் வெப்பநிலை மைனஸ் 20 டிஜிரி செல்சியஸ் ஆக உள்ளது. இதன் காரணமாக நீர்நிலைகள் உறைந்து காணப்படுகின்றன. இவ்வாறு நீர்நிலைகள் உறைந்துள்ள நிலையில் ரஷ்ய மக்கள் புது வகையான விளையாட்டை கண்டுபிடித்துள்ளனர். அதாவது, வெப்பத்தை தக்க வைக்க கூடிய சிவப்பு நிற உடை ஒன்றை அணிந்துக்கொண்டு அவர்கள் பனி கட்டிகள் மீது படுத்துக்கொண்டு இந்த விளையாட்டை விளையாடுகின்றனர்.
இதையும் படிங்க : காங்கோவில் சுரங்க விபத்து.. 200 பேர் பலியான நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்!
பனி கட்டிகள் மீது படுத்து விளையாடும் ரஷ்ய மக்கள்
இந்த ஐஸ் ஃப்ளோட்டிங் விளையாட்டில் சுமார் மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை உள்ள உறைய வைக்கும் பனியின் மீது படுத்துக்கொண்டு மிதக்கலாம். ஸ்காண்டினேவியா மற்றும் வட ரஷ்யாவில் இந்த விளையாட்டு மிகவும் பிரபலமானதாக உள்ளது. இந்த நிலையில் இந்த ஆண்டு ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த விளையாட்டில் ஏராளமான ரஷ்ய மக்கள் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.