Ukraine – Russia : உக்ரைன் – ரஷ்யா விவகாரத்தை தீர்ப்பது கடினமாக உள்ளது.. டிரம்ப் கருத்து!

Russia - Ukraine War | ரஷ்யா - உக்ரைன் இடையே மூன்று ஆண்டுகளாக கடுமையான போர் நீடித்து வரும் நிலையில், அதனை முடிவுக்கு கொண்டுவர டிரம்ப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், அது குறித்து அவர் முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

Ukraine - Russia : உக்ரைன் - ரஷ்யா விவகாரத்தை தீர்ப்பது கடினமாக உள்ளது.. டிரம்ப் கருத்து!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

Published: 

24 Aug 2025 07:40 AM

வாஷிங்டன், ஆகஸ்ட் 24 : உலகில் 7 போர்களை நிறுத்திய தனக்கு உக்ரைன் – ரஷ்யா விவகாரத்தை (Ukraine – Russia Issue) தீர்ப்பது கடினமாக உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (America President Donald Trump) தெரிவித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர டிரம்ப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த நிலையில், உக்ரைன் – ரஷ்யா விவகாரம் குறித்து டிரம்ப் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்த போராடும் டிரம்ப்

உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2022 ஆம் ஆண்டு முதல் ரஷ்யா, உக்ரைன் மீது போர் நடத்தி வருகிறது. இதன் காரணமாக இரு நாடுகளும் ஏராளமான சேதங்கள் மற்றும் உயிரிழப்புகளை சந்தித்து வருகின்றன. உக்ரைன் – ரஷ்யா சிக்கல் அந்த இரு நாடுகளுக்கு மட்டுமன்றி, உலகிற்கும் சில சவால்களை ஏற்படுத்தி வருகின்றன. இதன் காரணமாக உக்ரைன் – ரஷ்யா இடையே நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக இரண்டாவது முறை அமெரிக்க அதிபராக பதவியேற்றது முதலே டிரம்ப் பல்வேறு நடவடிக்கைகள மேற்கொண்டு வருகிறார்.

இதையும் படிங்க : அமெரிக்காவின் 50 சதவீத வரி.. இந்தியாவுக்கு ஆதரவாக வந்த குரல்.. களமிறங்கிய சீனா!

இரு நாட்டு தலைவர்களையும் அழைத்து பேசிய டிரம்ப்

உக்ரைன் – ரஷ்யா போரை மத்தியஸ்தம் செய்து வருவதன் ஒரு பகுதியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் ரஷ்யா அதிபர் விளாடிமிர் ஆகியோரை நேரில் அழைத்து டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அவர்கள் இருவரிடம் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு எந்த விதமான முன்னேற்றமும் ஏற்ப்டவில்லை. இந்த நிலையில், போர் நிறுத்தம் கையெழுத்தாகும் வரை எதுவும் சொல்ல முடியாது என்று டிரம்ப் கூறியிருந்தார்.

இதையும் படிங்க : ஆப்கானிஸ்தான் பேருந்து விபத்து.. 19 குழந்தைகள் உட்பட 79 அகதிகள் உடல் கருகி பரிதாப பலி!

போரை நிறுத்துவது கடினமாக உள்ளது – டிரம்ப் கருத்து

இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டிரம்ப் கூறியுள்ளதாவது, புதினும் ஜெனஸ்கியும் இணைந்து செயல்படுவார்களா என்று நாங்கள் பார்த்து வருகிறோம்.  வெளிப்படையாக காரணங்களுக்காக அவர்கள் நன்றாக பழகுவது இல்லை. இருவருடன் நானும் இருக்க வேண்டுமா, இல்லையா என்பதை பின்னர் பார்ப்போம். இருவரும் சந்திக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் அவர்கள் தொடர்ந்து சண்டையிடுகிறார்கள். நான் ஏழு போர்களை நிறுத்தி விட்டேன். இந்த போரையும் நிறுத்த விரும்புகிறேன், ஆனால் அது மிகவும் கடினமாக மாறி வருகிறது என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.