Earthquake : பிலிப்பைன்ஸை உலுக்கிய நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6 ஆக பதிவு!

Strongest Earthquake Strikes Philippines | பிலிப்பைன்ஸ் பகுதியில் இன்று (அக்டோபர் 18, 2025) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்கு கடந்த வாரத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது அங்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Earthquake : பிலிப்பைன்ஸை உலுக்கிய நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6 ஆக பதிவு!

மாதிரி புகைப்படம்

Published: 

18 Oct 2025 08:56 AM

 IST

மணிலா, அக்டோபர் 18 : பிலிப்பைன்ஸ் (Philippines) நாட்டின் இன்று (அக்டோபர் 18, 2025) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் (Strong Earthquake) ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6 புள்ளிகளாக பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அது அங்கு கடுமையான நில அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக பிலிப்பைன்ஸ் மக்கள் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர். அங்கு கடந்த வாரத்தில் அடுத்தடுத்து தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டு பொதுமக்களை பீதியில் ஆழ்த்தியது. இந்த நிலையில், தற்போது மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

தீவு நாடான பிலிப்பைன்ஸ் ரிங் ஆஃப் பையர் (Ring of Fire) பகுதியில் அமைந்துள்ளது. இதன் காரணமாக அங்கு அடிக்கடி தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (அக்டோபர் 18, 2025) தெற்கு பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ தீவில் அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6 புள்ளிகளாக பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அது சக்திவாய்ந்த நிலநடுக்கமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சாலையில் சென்ற வாகனங்கள் மீது விழுந்து விபத்துக்குள்ளான விமானம்.. 2 பேர் உடல் சிதறி பலி!

கடந்த வாரம் பிலிப்பைன்ஸை உலுக்கிய நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸில் அக்டோபர் 10, 2025 அன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவு செய்யப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து இன்று அங்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்திய நேரப்படி சரியாக அதிகாலை 4.30 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் தூங்கிக்கொண்டு இருந்த நேரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அலறி அடித்துக்கொண்டு தங்களது வீடுகளை விட்டு வெளியேறிய பொதுமக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க : முடிவுக்கு வந்த போர்.. வீடு திரும்பும் பணயக் கைதிகள்.. இஸ்ரேல் விரைந்த அதிபர் டிரம்ப்

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் சற்று அதிகமாக உள்ள நிலையில், அது அங்கு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தின் பாதிப்புகள் தொடர்பான எந்த வித தகவலும் தற்போது வரை வெளியாகாமல் உள்ளது.