மனைவி மெலிண்டாவுக்கு ரூ.71,100 கோடி ஜீவனாம்சம் வழங்கிய பில் கேட்ஸ்!
Bill Gates 71,100 Crore Alimony To His Wife | உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக உள்ள பில் கேட்ஸ் 2021 ஆம் ஆண்டு தனது மனைவியை விவாகரத்து செய்தார். இந்த நிலையில், தற்போது அவருக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கியுள்ளார்.

பில் கேட்ஸ் மற்றும் அவரது முன்னாள் மனைவி மெலிண்டா
வாஷிங்டன், ஜனவரி 13 : உலகின் மிகப்பெரிய பணக்காரரும் மைக்ரோசாஃப்ட் (Microsoft) நிறுவனத்தின் நிறுவனருமான பில் கேட்ஸ் (Bill Gates) தனது மனைவியை விவாகரத்து செய்துக்கொண்டார். அவருக்கும், அவரது மனைவி மெலிண்டாவுக்கும் 2021, ஆகஸ்ட் மாதம் விவாகரத்து உறுதி செய்யப்பட்டது. பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டாவுக்கு ஜென்னர், ரோரி மற்றும் போப் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு விவாகரத்து வழக்கப்பட்ட நிலையில், தற்போது இருவரும் சட்ட ரீதியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை
உலக பணக்காரர்களில் ஒருவராக உள்ள பில்கேட்ஸ் பல்வேறு தொண்டுகளையும் செய்து வருகிறார். அந்த வகையில் 2020 ஆம் ஆண்டு, அதாவது விவாகரத்து பெறுவதற்கு ஒரு ஆண்டுக்கு முன்னதாக தனது மனைவியுடன் இணைந்து பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் (Bill & Melinda Gates) என்ற அறக்கட்டளையை அவர் திறந்து வைத்தார். இந்த அறக்கட்டளை ஆரம்ப சுகாதாரம், கல்வி மற்றும் பருவநிலை மாற்றங்கள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் தொடங்கப்பட்டது.
இதையும் படிங்க : சிறுமிகளை துப்பாக்கி முணையில் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி.. 6 பேரை சுட்டுக் கொன்ற நபர் அதிரடி கைது!
பில் கேட்ஸ் தனது மனைவியுடன் இணைந்து தொடங்கிய இந்த அறக்கட்டளை அவர்களது விவாகரத்துக்கு பிறகும் எந்த வித மாற்றமும் இல்லாமல் கொள்கையின் அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், பில் கேட்ஸ் தனது மனைவிக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கியுள்ளார்.
மனைவிக்கு மொத்தம் ரூ.1,12,800 கோடி ஜீவனாம்சம்
விவாகரத்து பெறும் நபர்கள் தங்களது மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று சட்ட விதிகள் கூறும் நிலையில், 2021-ல் விவாகரத்து விசாரணையின் போது தனது மனைவிக்கு ரூ.1,12,800 கோடி தருவதாக பில் கேட்ஸ் ஒப்புக்கொண்டுள்ளார். இதன் காரணமாக அவர் தனது மனைவிக்கு ஏற்கனவே ரூ.41,700 கோடி ஜீவனாம்சம் வழங்கிய நிலையில், தற்போது ரூ.71,000 கோடியை வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க : இந்தியாவுக்கு மேலும் 500% வரி?.. மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த டிரம்ப்.. அடுத்து என்ன?
இதுவரை உலக அளவில் வழங்கப்பட்ட ஜீவம்னாம்சங்களில் இது அதிகப்படியானது என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.