கிம் ஜாங் உன்னை தொடர்ந்து வடகொரியாவை ஆளப்போகும் அவரது மகள்?.. உலக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய தகவல்!
Kim Ju Ae Will Rule North Korea | வடகொரியாவின் தற்போதைய அதிபராக கிம் ஜாங் உன் உள்ளார். அவர் அங்கு சர்வாதிகார ஆட்சி நடத்தி வரும் நிலையில், அவரை தொடர்ந்து அவரது மகள் கிம் ஜூ ஏ பதவி ஏற்க உள்ளதாக கூறப்படுகிறது.

கிம் ஜாங் உன் மற்றும் அவரது மகள் கிம் ஜூ ஏ
பியாங்யாங், பிப்ரவரி 14 : வடகொரியாவின் (South Korea) தற்போதைய அதிபராக கிம் ஜாங் உன் (Kim Jong Un) உள்ள நிலையில், அந்த நாட்டின் அடுத்த அதிபராக கிம் ஜாங் உன்னின் மகள் கிம் ஜு ஏ (Kim Ju Ae) பொறுப்பேற்க உள்ளதாக பரவலாக பேசப்படுகிறது. கிம் ஜு ஏ வடகொரியாவின் அடுத்த அதிபராக பதவி ஏற்க உள்ளது தொடர்பான தகவல்கள் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், வடகொரியாவின் புதிய அதிபராக கிம் ஜு ஏ பொறுப்பேற்க உள்ளதாக வெளியாகி வரும் தகவல் குறித்து விரிவாக பார்க்கலாம்.
வடகொரியாவை ஆட்டி படைத்து வரும் கிம் ஜாங் உன்
வடகொரியாவின் தற்போதைய அதிபராக கிம் ஜாங் உன் பதவி வகித்து வருகிறார். அவர் அங்கு சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார். வடகொரியா மக்கள் என்ன உணவு உண்ண வேண்டும், என்ன உடை அணிய வேண்டும், எந்த எந்த பெயர்களை வைக்கலாம், எவற்றை வைக்க கூடாது, பெண்கள் எத்தகைய உடை அணிய வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகளை அமலில் வைத்துள்ளார். இவ்வாறு வடகொரியாவில் அவர் தனி சாம்ராஜ்யத்தையே நடத்தி வரும் நிலையில், அவர் தனது அரசியல் வாரிசை தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதையும் படிங்க : நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம்…7 நிமிடம் உலகம் இருளில் மூழ்கும்…எப்போது தெரியுமா!
அரசியல் வாரிசை தேர்வு செய்த கிம் ஜாங் உன்?
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், தனது மகள் கிம் ஜூ ஏவை தனது அதிகாரப்பூர்வ அரசியல் வாரிசாக தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீப காலமாக ராணுவ அணிவகுப்புகள், ஏவுகணை சோதனைகள் மற்றும் முக்கிய அரசு விழாக்களில் கிம் ஜாங் உன்னுட அவரது மகள் கிம் ஜூ ஏ எப்போது இருப்பது இந்த தகவலை மேலும் உறுதி செய்யும் விதமாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க : அடுத்த 10 ஆண்டுகளுக்குள் நிலவில் நகரம்.. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் உறுதி!
வடகொரியாவின் முக்கிய ராணுவ தளபதிகள் கிம் ஜூ ஏவுக்கு தலைவணங்கி மரியாதை செலுத்துவது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி பேசுபொருளாகி வருகின்றன. இந்த நிலையில், வடகொரியாவின் அடுத்த அதிபராக நியமிக்கப்படுவதற்கு கிம் ஜூ ஏவுக்கு தீவிர பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.