கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ஒத்திவைப்பு.. பின்னணி என்ன? வெளியான தகவல்கள்

Nimisha Priya Case : கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏமனில் பணியாற்றிய நிமிஷா பிரியா, அந்நாட்டைச் சேர்ந்தவரை கொலை செய்த வழக்கில், 2017ஆம் ஆண்டு முதல் சிறையில் உள்ளார். அவருக்கு 2025 ஜூலை 16ஆம் தேதியான நாளை மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது.

கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ஒத்திவைப்பு..  பின்னணி என்ன? வெளியான தகவல்கள்

நிமிஷா பிரியா

Updated On: 

15 Jul 2025 14:51 PM

கேரளா, ஜூலை 15 : கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் (Nimisha Priya) மரண தண்டனை (Nimisha Priya Execution) ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தலால் அப்து மாஹதி என்பவரை கொலை செய்த வழக்கில் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்த மரண தண்டனை 2025 ஜூலை 16ஆம் தேதியான நாளை நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை ஏமனில் நிறைவேற்றப்பட இருந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது நிமிஷா பிரியா ஏமன் சிறையில் உள்ளார். மரண தண்டனையில் இருந்து நிமிஷா பிரியாவை காப்பாற்ற மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், அதில் எதுவும் உடன்பாடு எட்டப்படவில்லை. ஏமன் நாட்டு சட்டப்படி, பாதிக்கப்பட்டோரின் தலால் அப்து மாஹதி குடும்பத்தினருக்கு ரத்தப் பணத்தை கொடுத்து, அவர்கள் மன்னித்தால், நிமிஷா பிரியா மரண தண்டனையில் காப்பாற்றப்படுவார். ஆனால், ரத்தப் பணத்தை தலால் அப்து மாஹதி குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்கவில்லை.

நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ஒத்திவைப்பு

இதற்கான பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையில், இந்தியாவின் கிராண்ட் முஃப்தி என்று அழைக்கப்படும் சன்னி முஸ்லீம் தலைவர் காந்தபுரம் அபுபங்கர் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையீட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். கடந்த மூன்று தினங்களாக பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஏபி அபூபக்கர் ஏமனில் உள்ள மத அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார், அதைத் தொடர்ந்து இன்று தாமரில் ஒரு கூட்டம் நடைபெற உள்ளது.

Also Read : கர்ப்பமாக இருப்பது தெரிந்த 17 மணி நேரத்தில் குழந்தையை பெற்றெடுத்த பெண்.. ஷாக் சம்பவம்!

அங்குள்ள பிரபல சூஃபி தலைவரும் ஷேக் ஹபீப் உமர் பின் ஹபீல் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.  தலால் அப்து மாஹதி குடும்பத்தினரும் கலந்து கொள்ள உள்ளனர். எனவே, இன்று நடக்கும் பேச்சுவார்த்தை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதில் தான், நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்படுமா என்பது தெரியவரும். பேச்சுவார்த்தை நடைபெறும் சூழலில், நிமிஷா மரண தண்டனையை ஒத்திவைக்க வைக்கப்பட்டுள்ளது.

அடுத்து என்ன நடக்கும்?

நிமிஷா மரண தண்டனை நிறைவேற்றம் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால், மரண தண்டனை ரத்து செய்யப்படவில்லை. மரண தண்டனையை ரத்து செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் ஏமனில் தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கிடையில், நிமிஷா பிரியாவின் குடும்பத்தினரின் ரத்த பணத்தை தலால் அப்து மாஹதி ஏற்றுக் கொண்டால், அவர்  தப்பிக்கலாம்.

நிமிஷாவின் குடும்பத்தினர் தலாலின் குடும்பத்திற்கு ரூ.8.5 கோடி வழங்க முன்வந்துள்ளதாக தெரிகிறது. இருப்பினும், இந்த பணத்தை பெற்று கொண்டு, மன்னிப்பது அவர்கள் எடுக்க வேண்டிய முடிவு. தலால் குடும்பத்தினர் ரத்தப் பணத்தை மறுத்தால், மரண தண்டனை என்பது நிறைவேற்றப்படலாம்.

Also Read : ஆண்மை நீக்கம், ஆயுள் தண்டனை.. 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு கடுமையான தண்டனை!

வழக்கின் பின்னணி

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் நிமிஷா. இவர் செவிலியர் படிப்பை முடித்த இவர், வேலைக்காகா 2008ஆம் ஆண்டு ஏமன் நாட்டிற்கு வந்திருக்கிறார். அப்போது,சொந்தமாக கிளினிக் ஒன்றையும் தொடங்கினார். இதற்காக ​​நிமிஷா 2014 இல் தலால் அப்த மாஹதியுடன் தொடர்பு கொண்டார். அந்நாட்டின் விதிகளின்படி, வெளிநாட்டவர்கள் தொழிலை தொடங்குவதற்கு, அந்நாட்டினருடன் கூட்டாளிகள் இருப்பது என்பது விதி.

அதன்படியே, தலால் அப்து மாஹதியுடன் கிளினிக்கை திறந்தார். அதன்பிறகு, மாஹதி, நிமிஷா பிரியாவின் பாஸ்போர்ட் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை எடுத்து வைத்து அவரை துன்புறுத்தியதாக தெரிகிறது. எனவே, 2017ஆம் ஆண்டு மாஹதிக்கு மயக்க மருந்து கொடுத்து, தனது பாஸ்போர்ட்டை மீட்க முயன்றபோது, அதிகமாக மயக்க மருந்து கொடுத்ததால், மாஹதி உயிரிழந்தார். இதனை அடுத்து, மாஹதி கொலை வழக்கில் நிமிஷா பிரியாவு 2017ல் கைதானார். அதன்பிறகு, அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, 2024ல் ஜனாதிபதி மரண தண்டனையை உறுதி செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories
Shubhanshu Shukla: வெற்றிகரமாக தரையிறங்கிய ஸ்பேஸ்எக்ஸின் டிராகன் விண்கலம்.. வெற்றி நாயகனாக திரும்பிய சுபன்ஷூ சுக்லா..!
நிமிஷா பிரியாவின் மரண தண்டனையைத் தடுக்க ஏமன் உச்ச நீதிமன்றத்தில் தீவிர பேச்சுவார்த்தை: கருணைக்கு ஒரு கடைசி வாய்ப்பு!
கர்ப்பமாக இருப்பது தெரிந்த 17 மணி நேரத்தில் குழந்தையை பெற்றெடுத்த பெண்.. ஷாக் சம்பவம்!
டிராகன் விண்கலத்தில் பூமிக்கு புறப்பட்டார் சுபான்ஷு சுக்லா.. மாலையில் தரையிரங்குகிறார்!
ஆண்மை நீக்கம், ஆயுள் தண்டனை.. 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு கடுமையான தண்டனை!
அயர்லாந்து: 796 குழந்தைகள் கழிவுநீர் குழிக்குள் புதைக்கப்பட்ட கொடூர உண்மை!