இந்தோனேசியா பள்ளி மசூதியில் குண்டு வெடிப்பு.. 55 மாணவர்கள் காயம்.. அதிர்ச்சி சம்பவம்!

Jakarta School and Mosque Bomb Blast | இந்தோனேசியாவில் நேற்று (நவம்பர் 07, 2025) ஒரு பள்ளி வளாகத்தில் உள்ள மசூதியில் குண்டு வெடிப்பு ஏற்பட்டது. இதில் 55 மாணவர்கள் காயமடைந்த நிலையில், அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தோனேசியா பள்ளி மசூதியில் குண்டு வெடிப்பு.. 55 மாணவர்கள் காயம்.. அதிர்ச்சி சம்பவம்!

குண்டுவெடிப்பு நடந்த இடம்

Updated On: 

08 Nov 2025 08:09 AM

 IST

ஜகார்த்தா, நவம்பர் 08 : இந்தோனேசியாவின் (Indonesia) தலைநகரான ஜகார்த்தாவின் வடக்கு பகுதியில் கெலாபா காடிங் குடியிருப்பு அமைந்துள்ளது. இங்குள்ள கடற்படை வளாகத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளி வளாகத்திற்குள்ளேயே மசூதியும் உள்ளது. இந்த நிலையில் நேற்று (நவம்பர் 07, 2025) தொழுகை நடந்துக்கொண்டு இருந்த நேரம், மசூதியிலும் அதன் அருகில் உள்ள அரசு பள்ளியிலும் குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி மசூதியில் குண்டு வெடிப்பு

பள்ளியில் மாணவர்கள் இருந்த நிலையில், பள்ளி மசூதியிலும் சில மாணவர்கள் தொழுகையில் ஈடுபட்டு இருந்துள்ளனர். இந்த நிலையில், பயங்கர வெடி சத்தத்துடன் இரண்டு வெடுகுண்டுகள் வெடித்த நிலையில், அந்த பகுதியை கடும் புகை மூட்டம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக மாணவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடியுள்ளனர். இந்த விபத்தில் 55 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்களின் உடல்களை கண்ணாடி துண்டுகள் கிழித்துள்ளன. மேலும் சில மாணவர்களின் உடல்களில் பலத்த தீ காயங்கள் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : பிலிப்பைன்ஸை புரட்டி போட்ட கடுமையான சூறாவளி.. 140 பேர் பலி!

பள்ளி, மருத்துவமனையில் கூடிய பெற்றோர் – பரபரப்பு

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெற்றோர்கள் உடனடியாக பள்ளி மற்றும் மருத்துவமனை அருகே கூடியுள்ளனர். அனைவரும் ஒரே நேரத்தில் மொத்தமாக் கூடிய நிலையில், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காயமடைந்த மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க : நேபாள பனிச்சரிவில் பலியான 9 மலையேற்ற வீரர்கள்.. சடலங்கள் மீட்பு!

பயங்கரவாத அமைப்பு எதுவும் பொறுப்பேற்கவில்லை – காவல்துறை

இந்த தாக்குதலுக்கு என்ன காரணம் என்பது குறித்து இன்னும் தெரிய வராமல் உள்ளது. இது குறித்து கூறியுள்ள காவல்துறை, இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை என்று கூறியுள்ளது. இந்த நிலையில், குண்டு வெடிப்பின் போது பள்ளி மற்றும் மசூதியில் இருந்த மாணவர்கள் காதுகளை பொத்திக் கொண்டு ஓடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகிம் வருகிறது.