TV9 Tamil NewsWorld > Submarine Attack On Iranian Ship Off Sri Lanka 101 Missing
இலங்கைக்கு அருகே ஈரான் கப்பல் மீது தாக்குதல் -101 பேர் மாயம் – பரபரப்பு தகவல்
Israel Iran War : இலங்கை கடற்கரைக்கு அருகே சென்றுகொண்டிருந்த ஈரானிய கப்பல் மீது நீர்மூழ்கிக் கப்பல்தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் குறைந்தது 101 பேர் மாயமாகியுள்ளதாகவும், மேலும் 78 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்தி நிறுவனமான ரூட்டர்ஸ் தகவல் தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்கரைக்கு அருகே சென்றுகொண்டிருந்த ஈரானின் கப்பல் மீது, நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் குறைந்தது 101 பேர் மாயமாகியுள்ளதாகவும், மேலும் 78 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்தி நிறுவனமான ரூட்டர்ஸ் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது. இதில் 32 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவுக்கு நெருக்கமான இலங்கை கடற்கரைக்கு அருகே இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது மக்களிையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கைக்கு அருகே ஈரான் கப்பல் மீது தாக்குதல்
இந்த சம்பவம் மார்ச் 4, 2026 அன்று நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த ஐஆர்ஐெஸ் டெனா என்ற ஈரானிய கப்பல் மீது திடீரென தாக்குதல் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அந்த கப்பலில் கிட்டத்தட்ட 180 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ஈரான் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் கப்பல் மூழ்கும் நிலையில் இருந்தது.
இதனயைடுத்து உடனியாக மீட்பு நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டது. இலங்கை கடற்படையினர் மற்றும் விமானப்படையினர் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதுவரை கப்பலில் இருந்த 32 பேரை படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையை சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சகத்தை சேர்ந்த மூத்த அதிகாரி டாக்டர் அனில் ஜாசிங்கே இதுகுறித்து தெரிவித்ததாவது, மீட்கப்பட்டவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருந்தது. மேலும் 7 பேர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்களுக்கு சிறிய காயங்கள் இருந்ததால் அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.
மேலும் இது தொடர்பாக இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் இலங்கை நாடாளுமன்றத்தில், ஐஆர்ஆஎஸ் டெனா கப்பல் தாக்குதலுக்கு உள்ளானதாகவும் உடனடியாக கடற்படை கப்பல்கள் மற்றும் விமானப்படையின் சார்பில் விமானங்கள் ஆகியவை அனுப்பப்பட்டன. தற்போது கடலில் மாயமானவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்றார்.
இதற்கிடையில் அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த 5 நாட்களாக போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தெஹ்ரான் உள்ளிட்ட நகங்களின் மீது டிரோன் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. அதற்கு பதிலளிக்கும் விதமாக ஈரான் இஸ்ரேலே நோக்கி ஏவுகணைகள் மற்றும் டிரோன் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. இந்த போர் காரணமாக மத்திய கிழக்கு மற்றும் அதனை சுற்றியுள்ள கடல் பகுதிகளில் பதற்றம் அதிகரித்து வருகிறது.