துபாயில் மீண்டும் தாக்குதல்.. புர்ஜ் கலிஃபா அருகே புகை மூட்டம்.. வைரலாகும் வீடியோக்கள்!

Dubai Hit Again: ட்ரோன் தாக்குதலுக்குப் பிறகு இந்த புகை எழுந்ததாகக் கூறப்படும் நிலையில், புர்ஜ் கலிஃபா நேரடியாகத் தாக்கப்பட்டதா அல்லது அதன் அருகில் இருந்த பகுதி தாக்கப்பட்டதா என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

துபாயில் மீண்டும் தாக்குதல்.. புர்ஜ் கலிஃபா அருகே புகை மூட்டம்.. வைரலாகும் வீடியோக்கள்!

துபாயில் மீண்டும் தாக்குதல்..

Updated On: 

13 Mar 2026 10:46 AM

 IST

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் வளைகுடா பிராந்தியத்தையே உலுக்கியுள்ளன. இதில், உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபா (Burj Khalifa) அமைந்துள்ள துபாய் நகரத்தின் பல்வேறு பகுதிகளில் குண்டுவெடிப்புகள் மற்றும் கரும்புகை காணப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி இறுதியில், ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே மோதல் தீவிரமடைந்தது. ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் முக்கிய நகரங்களை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைகளை ஏவியது. இந்தத் தாக்குதல் சங்கிலியின் ஒரு பகுதியாக துபாயின் முக்கியப் பகுதிகளும் தாக்குதலுக்கு உள்ளாகின.

இதையும் படிக்க: போரின் தாக்கம் – எரிபொருள் மட்டுமல்ல… இண்டெர்நெட் சேவையும் பாதிக்கும் அபாயம் – என்ன காரணம்?

புர்ஜ் கலிஃபா அருகே புகை:

சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோக்களில், புர்ஜ் கலிஃபா கட்டிடம் பின்னணியில் இருக்க, அருகில் ஒரு பகுதியில் கரும்புகை எழுவது பதிவாகியுள்ளது. ட்ரோன் தாக்குதலுக்குப் பிறகு இந்த புகை எழுந்ததாகக் கூறப்படும் நிலையில், புர்ஜ் கலிஃபா நேரடியாகத் தாக்கப்பட்டதா அல்லது அதன் அருகில் இருந்த பகுதி தாக்கப்பட்டதா என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

முக்கிய இடங்களுக்கு அருகே தாக்குதல்:

துபாயின் பிரபலமான பாம் ஜுமேரா (Palm Jumeirah) தீவு, மற்றும் புர்ஜ் அல் அரபு (Burj Al Arab) ஹோட்டல் ஆகிய இடங்களுக்கு அருகிலும் தாக்குதல் சம்பவங்கள் மற்றும் புகை மூட்டம் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதிகாரிகளின் விளக்கம்:

ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம், ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைத் தங்கள் வான் பாதுகாப்பு அமைப்பு (Air Defence System) வெற்றிகரமாக இடைமறித்து அழித்ததாகத் தெரிவித்துள்ளது. இதனால் பெரிய அளவிலான உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப்பட்டதாகவும், இடைமறிக்கப்பட்ட ஏவுகணைகளின் சிதறல்கள் விழுந்ததால் சில இடங்களில் சிறிய அளவிலான தீ விபத்துகள் மட்டுமே ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: “அண்டை நாடுகள் மீது இனி தாக்குதல் நடத்த மாட்டோம்”.. மன்னிப்பு கேட்ட ஈரான்..

பரவும் அச்சம்:

இந்த தாக்குதல்களால் வளைகுடா நாடுகளில் வான்வெளி போக்குவரத்து தற்காலிகமாக மூடப்பட்டது. துபாய் சர்வதேச விமான நிலையத்திலும் பாதிப்புகள் ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுற்றுலாப் பயணிகளுக்கும், குடியிருப்பாளர்களுக்கும் இது ஒரு அச்சமான சூழலை உருவாக்கியுள்ளது. இந்த மோதல்கள் காரணமாக, பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

Follow Us
மாணவர்கள் செய்த 'பிராங்க்'.. அமெரிக்காவில் புகழ்பெற்ற ஆசிரியர் உயிரிழப்பு!
மினாப் பள்ளி தாக்குதல்: அமெரிக்கா மீது சந்தேகம்
மும்பையில் எரிவாயு தட்டுப்பாடு..20% உணவகங்கள் மூடல்..
துபாயில் தவிக்கும் இந்தியர்கள்.. தனது 64 அடுக்குமாடி குடியிருப்புகளை கொடுத்து உதவிய இந்தியத் தொழிலதிபர்..