ட்ரோன் தாக்குதல்.. அதிபர் மீது கொலை முயற்சி… பதறிய ஈரான்!
Iran President Masoud Pezeshkian : இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில், ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியானுக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 2025 ஜூன் 16ஆம் தேதி தெஹ்ரானில் உள்ள கட்டிடத்தில் இஸ்ரேல் குறிவைத்து தாக்குதலில், அதிபர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

ஈரான் அதிபர் மசூத்
ஈரான், ஜூலை 12 : ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் (Iran President Masoud Pezeshkian) மீது கொலை முயற்சி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியானுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. தெஹ்ரானில் உள்ள தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில், அதிபர் மசூர் காயம் அடைந்துள்ளார். இதில் அவரது காலில் லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2025 ஜூன் மாதம் இஸ்ரேல் ஈரான் (Israel Iran Conflict) இடையே போர் வெடித்தது. இஸ்ரோல் ஈரான் என இருநாடுகளும் 12 நாட்கள் மாறி மாறி தாக்குதல் நடத்தனர். இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். ஈரான் அணு ஆயுதங்களை தயாரித்து வருவதை எதிர்த்து, இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த பதிலடியாக ஈரானும் தாக்குதல் நடத்தியது.
ஈரான் அதிபர் மீது கொலை முயற்சி
இஸ்ரேலில் அப்பாவி மக்கள் இருக்கும் இடங்களிலும் ஈரான் தாக்குதல் நடத்தியது. இப்படியே இருநாடுகளும் தொடர்ந்து 12 நாட்கள் தாக்குதல் நடத்தினர். அதன்பிறகு, இந்த விஷயத்தில் அமெரிக்கா தலையீட்டு போரை முடிவுக்கு கொண்டு வந்தது. இருப்பினும், இஸ்ரேல் ஈரான் போர் தொடர்பாக நாள்தோறும் அதிர்ச்சியூட்டும் தகவ்லகள் வெளியாகி வருகிறது. தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2025 ஜூன் 16ஆம் தேதியன்று நடந்த தாக்குதலில் அவர் காயம் அடைந்துள்ளார்.
Also Read : இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்.. ஈரான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
அதாவது, தெஹ்ரானின் மேற்கு பகுதியில் உள்ள கட்டிடத்தில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில், அதிபர் மசூத் பெசஸ்கியான், நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், நீதித்துறை தலைவர் மொஹ்சேனி உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் இருந்தனர். அப்போது , இஸ்ரேல் கட்டிடத்தின் மீது 6 ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
லேசான காயம்
இதில், அதிபர் மசூதின் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக ஈரான் கூறியுள்ளது. தாக்குல் நடத்தப்பட்டதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த தாக்குதலை தொடர்ந்து, கட்டிடத்தில் இருந்து வெளியேறும்போது, அதிபர் மசூத் தவிர, சில அதிகாரிகளுக்கு காயம் ஏற்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது. அண்மையில் கூட, தன்னை இஸ்ரேல் கொல்ல முயற்சிப்பதாக மசூர் கூறினார்.
Also Read : அமெரிக்க ராணுவ தளத்தை நோக்கி ஈரான் ஏவுகணை தாக்குதல்: கத்தாரில் பரபரப்பு
12 நாட்கள் போரின்போது இஸ்ரேல் ஈரானின் முக்கிய தலைவர்களை கொலை செய்திருக்கிறது. அதன்படி, ஈரானிய ஆயுதப் படைகளின் தலைவர் முகமது பகேரி, ஈரான் கவால் படை தளபதி ஹொசன் சலாமி, ஐஆர்சிஜி விமானப்படை தளபதி அமீர் அலி ஹாஜிசாடே உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர். ஈரானின் உயர்மட்டத் தலைவரான அயதுல்லா அலி கமேனியை கொலை செய்ய திட்டமிடுவதாக இஸ்ரேல் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.