நடுக்கடலில் தீ பிடித்த சொகுசு கப்பல்.. 300 பேரின் கதி என்ன? அதிர்ச்சி சம்பவம்!

Indonesia Ferry Accident : இந்தோனேசியா தலாவுத் தீவில் 300 பேருடன் சென்ற சொகுசு கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நடுக்கடலில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்தது. அதோடு, உயிரை காப்பாற்றக் கொள்ள பயணிகள் கப்பலில் இருந்து குதித்துள்ளனர். உயிர்காக்கும் உயிர் ஜாக்கெட்டுகளுடன் பயணிகள் குதித்துள்ளனர். இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

நடுக்கடலில் தீ பிடித்த சொகுசு கப்பல்.. 300 பேரின் கதி என்ன? அதிர்ச்சி சம்பவம்!

சொகுசு கப்பலில் தீ விபத்து

Updated On: 

20 Jul 2025 21:28 PM

இந்தோனேசியா, ஜூலை 20 : இந்தோனேசியா தலாவுத் தீவில் இருந்து மனோடா நகரை நோக்கி சென்ற சொகுசு கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கப்பிலில் 300 பேர் பயணம் செய்த நிலையில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டவுடன், உயிர் பிழைக்க கடலில் குதித்த பயணிகளை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தோனேசியா, ஜூலை 20 : இந்தோனேசியா தலாவுத் தீவில் இருந்து மனோடா நகரை நோக்கி சென்ற சொகுசு கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கப்பிலில் 300 பேர் பயணம் செய்த நிலையில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டவுடன், உயிர் பிழைக்க கடலில் குதித்த பயணிகளை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தோனேசியா நாடு தற்போது பிரபல சுற்றுலா தளங்களில் ஒன்றாக திகழ்கிறது.

இங்கு நாள்தோறும் ஆயிரணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகே, இந்தோனேசியா பிரபல சுற்றுலா தலமாக மாறியது. அங்கு மற்ற போக்குவரத்தை காட்டிலும் கப்பல் போக்குவரத்து மிகவும் பிரபலமான ஒன்று. இந்த நிலையில் தான், இந்தோனேஷியாவின் தலுவாட் தீவு பகுதியில் இருந்து வடக்கில் உள்ள சுலவேசி என்ற பகுதிக்கு சொசுகு கப்பல் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. இந்த கப்பலில் 300க்கும் மேற்பட்ட பயணிகள் சென்றுக் கொண்டிருந்தனர். நடுக்கடலில் கப்பல் சென்றுக் கொண்டிருந்தபோது, திடீரென்று தீ பிடித்துள்ளது.

Also Read : ஒரு மணி நேரத்தில் 5 முறை.. ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடுப்பு

நடுக்கடலில் தீ பிடித்த சொகுசு கப்பல்


நடுக்கடலில் கரும்புகையுடன் கப்பல் முழுவதும் தீ பற்றி எரிந்தது. இதனால், கப்பலில் இருந்த அலறினர். உடனே, கப்பலில் இருந்த உயிர்காக்கும் ஜாக்கெட்டை மாட்டிக் கொண்டு கடலில் குதித்துள்ளனர். கப்பலில் ஏற்பட்ட தீ, அப்பகுதியில் புகை மண்டலம் போல் காட்சியளித்தது.

இது சம்பந்தமான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.  அந்த வீடியோவில், தீ விபத்து ஏற்பட்ட பிறகு, பீதியடைந்த பயணிகள் தீயில் இருந்து தப்பிக்க கடலில் குதிப்பதைக் காண முடிந்தது. கப்பலில் பல குழந்தைகளும் இருந்தனர். அவர்கள் கப்பலில் இருந்து குதித்துள்ளனர்.

Also Read : ஹாங்காங்கில் தீவிர சூறாவளி எச்சரிக்கை.. அச்சத்தில் உறைந்துள்ள பொதுமக்கள்!

அவர்களில் பெரும்பாலோர் உயிர் காக்கும் ஜாக்கெட்டுகள் அணிந்திருந்தனர். ஆனால் சிலர் அணியவில்லை. பல பயணிகள் ஜாக்கெட்டுகள் இல்லாமல் கடலில் குதித்தது போன்று வீடியோவில் உள்ளது. அருகிலுள்ள தாலிஸ் தீவு வழியாகச் சென்ற பல மீன்பிடி படகுகள் மூலம் பயணிகளை மீட்டனர். இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கப்பலில் இருந்து குதித்த பயணிகளை மீட்கும் பணிகள் நடந்து வருவதாக தெரிகிறது.  தற்போது வரை 200க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.