3 மாதங்களாக கத்தார் சிறையில் வாடும் இந்திய அதிகாரி – அப்படி என்ன பண்ணார்?

அமீத் குப்தா டேட்டா திருட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில் அவரது குடும்பத்தினர் இதனை மறுத்திருக்கின்றனர். இதனையடுத்து அமீத் குப்தாவின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும அவர்களுக்கு தேவையான அனைத்து ஆதரவுகளையும் வழங்குவதாகவும் டெக் மகிந்திரா நிறுவனம் விளக்கமளித்திருக்கிறது.

3 மாதங்களாக கத்தார் சிறையில் வாடும் இந்திய அதிகாரி - அப்படி என்ன பண்ணார்?

கத்தார் சிறையில் வாடும் இந்திய அதிகாரி

Published: 

28 Mar 2025 05:11 AM

 IST

ஐடி சேவைகளை வழங்கும் டெக் மகிந்திரா (Tech Mahindra) நிறுவத்தின் கத்தார் (Qatar) நாட்டின் தலைவர் அமீத் குப்தா, ஒரு டேட்டா திருட்டு வழக்கில் அந்நாட்டின் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். அவர் கடந்த ஜனவரி 1, 2025 அன்று கத்தார் தலைநகர் தோஹாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர் குஜராத் (Gujarat) மாநிலம் வடோதாராவைச் சேர்ந்தவர். அமீத் குப்தா டேட்டா திருட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில் அவரது குடும்பத்தினர் இதனை மறுத்திருக்கின்றனர். இதனையடுத்து அமீத் குப்தாவின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும அவர்களுக்கு தேவையான அனைத்து ஆதரவுகளையும் வழங்குவதாகவும் டெக் மகிந்திரா நிறுவனம் விளக்கமளித்திருக்கிறது.

கத்தாரில் இந்தியருக்கு நேர்ந்த கதி

இந்த நிலையில் அமீத் குப்தாவின் தாய் புஷ்பா குப்தா ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ”இரண்டு நாட்களாக என் மகனைக் காணவில்லை. அவருக்கு போன் செய்ய முயன்றும் முடியவில்லை. பின்னர் தான் அவர் கைது செய்யப்பட்டதே எங்களுக்கு தெரிந்தது. அதுவும் அவரது நண்பர் சொல்லி தான் தெரியும். தனது மகன் அமீத் குப்தா 48 மணி நேரமாக உணவு இல்லாமல் பூட்டி வைக்கப்பட்டார். பின்னர் வேறு அறைக்கு மாற்றப்பட்டார். தற்போது 3 மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் தற்போது வரை அவர் எதற்கு கைது செய்யப்பட்டார் என தெரியவில்லை. நிறுவனத்திற்குள் வேறு யாரா தவறு செய்திருக்கலாம். ஆனால் என் மகன் டெக் மகிந்திராவின் கத்தார் நாட்டு பொறுப்பாளர் என்பதால் காவல்துறையினர் அவரை கைது செய்திருக்கலாம் என தெரிவித்தார்.

தோஹா சென்று நான் என் மகனை அரை மணி நேரம் சந்தித்தேன். அமித் குப்தா ஒவ்வொரு புதன்கிழமையும் 5 நிமிடங்கள் மட்டுமே குடும்பத்துடன் பேச அனுமதிக்கப்படுகிறார். இது குடும்பத்தினருக்கும் அவருக்குமான ஒரே தொடர்பாக இருக்கிறது. அவர் சந்தித்து வரும் சிக்கல்கள் குறித்து எங்களிடம் பேசுவார். குஜராத்தின் வடோதரா நாடாளுமன்ற உறுப்பினர் (MP) ஹேமாங் ஜோஷியை சந்தித்து உதவி கேட்டுள்ளோம். அவர், இந்த விவகாரம் தொடர்பாக அரசுடனும் உரிய அதிகாரிகளுடனும் பேசுவதாக உறுதியளித்திருக்கிறார் என்றார்.

இந்திய தூதரகத்தின் முயற்சிகள்

இந்த விவகாரத்தில் கத்தார் நாட்டின் இந்திய தூதரகம், அமீத் குப்தா கைது செய்யப்பட்டது முதல் தற்போது வரை மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து தகவல் கேட்டு பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் அமித் குப்தாவின் குடும்பத்தினருடனும், கத்தார் அதிகாரிகளுடனும் வழக்கறிஞர்களுடனும் இணைந்து இந்த பிரச்னைக்கு தீர்வு காண முயற்சித்து வருகிறது.

டெக் மகிந்திரா நிறுவனத்தில் அமீத் குப்தா 12 ஆண்டுகளாக பணியாற்றியிருக்கிறார். தற்போது டெக் மகிந்திராவின் கத்தார் மற்றும் குவைத்தின் தலைவர் பதவியில் இருக்கிறார். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டில் குஜராத்தின் வடோதராவிலிருந்து கத்தாரின் தலைநகரமான தோஹாவுக்கு சென்றிருக்கிறார்.

டெக் மஹிந்திரா நிறுவனம் அமித் குப்தாவின் குடும்பத்தினருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, தேவையான ஆதரவை வழங்கி வருவதாக தெரிவித்துள்ளது. அதன் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளதாவது, “நாங்கள் அவரது குடும்பத்தினருடன் நெருங்கிய தொடர்பில் இருந்து, அவர்களுக்கு தேவையான ஆதரவை வழங்கி வருகிறோம். மேலும், இரு நாடுகளின் அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு, சட்ட விதிமுறைகள் குறித்து பேசி வருகிறோம் என்றார்.

பாகிஸ்தான் திருமணத்தில் துரந்தர் பட பாடல்.... வீடியோ வைரல்
ஆதார் கார்டு நகல்களுக்கு வருகிறது தடை.. விரைவில் அறிமுகமாகும் புதிய விதிகள்!
ரயில்களில் இருக்கும் மஞ்சள், வெள்ளைக் கோடுகளின் அர்த்தம் என்ன தெரியுமா?
YouTube பார்த்து சிகிச்சை செய்து இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி; போலி டாக்டர் கைது