உலகளாவிய நீர்நிலைகளில் 230 புதிய ராட்சத வைரஸ்கள் கண்டுபிடிப்பு.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
Giant Viruses Discovered in Ocean Waters | உலகம் முழுவதிலும் உள்ள கடல் தண்ணீர் மாதிரிகளை சோதனை செய்ததில் இதுவரை குறிப்பிடப்படாத சுமார் 230 புதிய ராட்சத வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ஏப்ரல் 21, 2025 அன்று வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றில் இது குறித்த அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

மாதிரி புகைப்படம்
அமெரிக்கா, ஜூன் 17 : உலகம் முழுவதும் உள்ள கடல்களின் தண்ணீர் மாதிரிகளை சோதனை செய்ததில் அவற்றில் நூற்றுக்கணக்கான ராட்சத வைரஸ்கள் (Hundreds of Giant Viruses) இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடல்வாழ் உயிரினங்களின் வாழ்வாதாரத்தில் வைரஸ்கள் எவ்வளவு முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதனை கண்டறியும் வகையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதில் இந்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், இந்த ராட்சத வைரஸ்கள் குறித்து விஞ்ஞானிகள் கூறுவது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
உலகம் முழுவதும் உள்ள கடல் தண்ணீர் மாதிரிகளை சோதனை செய்த விஞ்ஞானிகள்
அமெரிக்காவில் உள்ள மியாமி பல்கலைக்கழகத்தை (America Miami University) சேர்ந்த கடல் உயிரியலாளரான பெஞ்சமின் மின்ச் மற்றும் வைரலாஜிஸ்ட் முகமது மோனிருஸ்ஸாமன் ஆகியோர், அதிநவீன கணினி தொழில்நுட்பத்தின் உதவியுடன் கடல் தண்ணீர் மாதிரிகளில் உள்ள நுண்ணுயிரிகளின் மரபணுக்களை சோதனை செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்த ஆய்வு கடல் வாழ் உயிரினங்களின் சுற்றுசூழலை அறிந்துக்கொள்ள விஞ்ஞானிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதிலும் குறிப்பாக நுண்ணுயிரிகளின் வாழ்வாதாரத்தில் வைரஸ்களின் பங்கு என்னவாக உள்ளது என்பதை சோதனை செய்யும் முயற்சி ஆகும்.
நூற்றுக்கணக்கான ராட்சத வைரஸ்கள் கண்டுபிடிப்பு
Hundreds of Mysterious Giant Viruses Discovered Lurking in The Ocean… pic.twitter.com/fJnUnuuuqA
— Virtual Classroom (@_Alma_College) June 16, 2025
“Expansion of the Genomic and Functional Diversity of Global Ocean Giant Viruses” என்ற தலைப்பில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, ஏப்ரல் 21, 2025 அன்று வெளியிடப்பட்டது. இந்த ஆய்வு, உலக பெருங்கடல்களில் உள்ள வைரஸ்களின் பன்முகத்தன்மை குறித்த புரிதலை மேம்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இந்த 230 ராட்சத வைரஸ்களின் மரபணுக்களுக்குள் ஒளிச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ள 9 புரதங்கள் உட்பட 530 புதிய செயல்பாட்டு புரதங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வைரஸ்கள் தொற்று நோய்களின்போது ஹோஸ்டையும், ஒளிச்சேர்க்கை செயல்முறையையும் கையாள முடியும் என்பதை இது குறிப்பதாக கூறப்படுகிறது.
கடலில் உள்ள ராட்சத வைரஸ்களின் பன்முகத்தன்மையும் மற்றும் அவற்றின் பங்கையும், அவை பாசிகள் மற்றும் பிற கடல் நுண்ணுயிரிகளுடன் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்பதனையும் நன்கு புரிந்துக்கொள்வதன் மூலம் புலோரிடாவிலும், உலகம் முழுவதும் மனிதர்களின் உடல் நலத்திற்கு கேடு விலைவிக்கும் பாசிக்களின் அதிகரிப்பை நாம் கணித்து நிர்வகிக்க முடியும் என்று இந்த ஆராய்ச்சின் இணை ஆசிரியரும், கடல் உயிரியல் மற்றும் சூழலியல் துறையின் பேராசிரியருமான முகமது மோனிருஸ்ஸாமன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.