நாடு கடத்தப்படுகிறாரா எலான் மஸ்க்? அதிபர் டிரம்ப் எடுக்கப்போகும் முடிவு.. என்ன மேட்டர்?

Elon Musk vs Donald Trump : எலான் மஸ்க்கை நாடு கடத்த முடியுமா என தெரியாது எனவும் அதற்கான சாத்தியக் கூறுகளை பார்க்க வேண்டும் எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இதன் மூலம் இருவருக்கும் இடையே பிரச்னை மீண்டும் வெடித்துள்ளது. டிரம்பின் இந்த கருத்துக்கு எலான் மஸ்க் பதில் கொடுத்துள்ளார்.

நாடு கடத்தப்படுகிறாரா எலான் மஸ்க்? அதிபர் டிரம்ப் எடுக்கப்போகும் முடிவு.. என்ன மேட்டர்?

எலான் மஸ்க் - டொனால்டு டிரம்ப்

Updated On: 

02 Jul 2025 13:57 PM

அமெரிக்கா, ஜூலை 02 : அமெரிக்க அதிபர் டிரம்பிற்கும் (Donald Trump) உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்கிற்கும்  (Elon Musk) இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. தற்போது, எலான் மஸ்க்கை, அமெரிக்க அதிபர் டிரம்ப் நாடு கடத்த முயற்சித்து வருவதாக பகீர் தகவலை கூறியுள்ளார். இதன் மூலம் இருவருக்கு இடையே மீண்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதில் இருந்தே அவரது நெருங்கிய நண்பராக எலான் மஸ்க் இருந்து வந்தார். அதோடு, தேர்தலில் டிரம்பிற்கு பொருளாதார ரீதியாக பக்க பலமாக எலான் மஸ்க் இருந்தார். இதனை அடுத்து, டிரம்பின் Doge துறையில் தலைமை ஆலோசகராக எலான் மஸ்க் தொடர்ந்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதலில் எலான் மஸ்க் அந்த பதவியில் இருந்து 2025 ஏப்ரல் மாதம் விலகினார்.

டிரம்ப் vs  எலான் மஸ்க் இடையே மோதல்

டிரம்ப் கொண்டு வந்த மசோதா காரணமாக, இருவருக்கும் இடையே மோதல் வெடித்தது. ஒருவரைக்கொருவர் கடுமையாக விமர்சித்துக் கொண்டனர். பிறகு சிறிது நாட்கள் இருவரும் அமைதி காத்து வந்த நிலையில், மீண்டும் இருவருக்கு பிரச்சை வெடித்துள்ளது.

பிக் பியூட்டிஃபுல் மசோதா தொடர்பாக இருவருக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்த மசோதாவை எலான் மஸ்க் கடுமையாக எதிர்த்து வருகிறார். இது பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் என்றும், நாட்டின் வணிகங்கள் ஸ்தம்பிக்கும் என்றும், மின்சார வாகனத் துறையையும் பாதிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது மஸ்க்கின் நிறுவனமான டெஸ்லாவுக்கு பாதகமாக இருக்கலாம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மஸ்க் தனியாக ஒரு கட்சியை உருவாக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.  அமெரிக்கா பார்ட்டி என்ற கட்சியை தொடங்குவேன் என எலான் மஸ்க் அண்மையில் தெரிவித்து இருந்தார்.

நாடு கடத்தப்படுகிறாரா எலான் மஸ்க்?


இந்த நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் எலான் மஸ்க்கை நாடு கடத்துவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த டிரம்ப், “நாம் எலான் மீது DOGE ஐ போட வேண்டியிருக்கலாம். DOGE என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? DOGE என்பது திரும்பிச் சென்று எலான் மஸ்கை சாப்பிட வேண்டிய அசுரன். அவர் என்னுடன் அந்த விளையாட்டை விளையாடக்கூடாது.

மின்சார வாகனங்கள் துறையை ஆதரிப்பதற்கான நடவடிக்கைகளை இந்த மசோதா கைவிட்டதால் தான் எரிச்சலடைந்ததால் மஸ்க் இந்த மசோதாவைத் எதிர்கிறார். மானியங்கள் இல்லையென்றால், எலோன் கடையை மூடிவிட்டு தென்னாப்பிரிக்காவுக்குத் திரும்பிச் செல்ல வேண்டியிருக்கும்.

மஸ்க்கை நாடு கடத்த முடியுமா என தெரியவில்லை. அதற்கான சாத்தியக் கூறுகளை பார்க்க வேண்டும்” என கூறினார். டிரம்பின் நாடு கடத்தல் பதில் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட எலான் மஸ்க், “இந்த பிரச்னையா பெரியதாக்க விரும்பிகிறேன். ஆனால், இப்போது இல்லை” என பதிவிட்டுள்ளார்.