அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா கைது செய்யப்படுவது போன்ற AI வீடியோவை பகிர்ந்த டிரம்ப்.. வெடித்த சர்ச்சை!

Barak Obama AI Video | அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். தனது பேச்சுக்களாலும், செயல்களாலும் அவர் அவ்வப்போது இத்தகைய சர்ச்சைகளில் சிக்கிக்கொள்கிறார். அந்த வகையில், தற்போது அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கைது செய்யப்படுவது போன்ற ஏஐ வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அது தற்போது மிக வேகமாக வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா கைது செய்யப்படுவது போன்ற AI வீடியோவை பகிர்ந்த டிரம்ப்.. வெடித்த சர்ச்சை!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

Updated On: 

22 Jul 2025 13:06 PM

அமெரிக்கா, ஜூலை 22 : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (America President Donald Trump) சர்ச்சைகளில் சிக்குவதில் பெயர் போனவர். எதைப்பற்றியும், யாரை குறித்து கவலை கொள்ளாமல் கருத்து சொல்வதால் அவர் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இந்த நிலையில், அம்மெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா (America Former President Barak Obama) கைது செய்து சிறையில் அடைக்கப்படுவதை போல அவர் வெளியிட்டுள்ள செயற்கை நுண்ணறிவு வீடியோ மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஒபாமா குறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள வீடியோவில் இடம்பெற்றுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தொடர் சர்ச்சைகளில் சிக்கி வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

அமெரிக்காவின் தற்போதைய அதிபராக உள்ள டொனால்ட் டிரம்ப் துணிச்சலான பேச்சுகளாலும், கருத்துக்களாலும் அடிக்கடி தொடர் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அந்த வகையில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கைது செய்யப்படுவது போன்ற செயற்கை நுண்ணறிவு வீடியோ ஒன்றை அவர் தற்போது தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இதையும் படிங்க : Donald Trump : பிரிக்ஸ் கூட்டமைப்பு விரைவில் மறைந்து போகும்.. டொனால்ட் டிரம்ப் கருத்து!

இணையத்தில் வைரலாகும் பராக் ஒபாமாவின் ஏஐ வீடியோ

பராக் ஒபாமா அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஆவார். அமெரிக்காவில் தொடர்ந்து இரண்டு முறை, அதாவது 10 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி நடத்தியவர் என்ற சிறப்புக்கு சொந்தக்காரர். டொனால்ட் டிரம்ப், ஜோ பைடன் ஆகியோர் அடுத்தடுத்த ஆட்சியை கைப்பற்றவில்லை. அந்த வகையில் அமெரிக்காவில் கடைசியாக 10 ஆண்டுகள் தொடந்து ஆட்சி நடத்தியவர் ஒபாமா தான். ஒபாமாவுக்கு ஆதரவாளர்கள் இருந்தாலும், எதிர்ப்பாளர்களும் உள்ளனர்.

இந்த நிலையில் தான் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா FBI (Federal Bureau of Investigation) அதிகாரிகளால் கைது செய்யபப்டுவதை போன்ற செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence)  வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் பராக் ஒபாமாவை அதிகாரிகள் கைது செய்வது போன்றும் அதனை அருகில் அமர்ந்து டிரம்ப் பார்த்துக்கொண்டு இருப்பது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. அது குறித்து பதிவிட்டுள்ள டிரம்ப், யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் கிடையாது என்று கூறியுள்ளார்.