Bangladesh Plane Crash: பள்ளிக்கூடம் மீது விழுந்த வங்கதேச விமானப்படை விமானம்.. இதுவரை 19 பேர் உயிரிழப்பு..!

Dhaka Air Force Jet Crash: டாக்காவின் உத்தரா பகுதியில் உள்ள மைல்ஸ்டோன் பள்ளியில் வங்கதேச விமானப்படையின் F-7 BGI பயிற்சி விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். விமானம் பள்ளி கட்டிடத்தின் மீது விழுந்து தீப்பிடித்தது. மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.

Bangladesh Plane Crash: பள்ளிக்கூடம் மீது விழுந்த வங்கதேச விமானப்படை விமானம்.. இதுவரை 19 பேர் உயிரிழப்பு..!

வங்கதேச விமான விபத்து

Published: 

21 Jul 2025 18:12 PM

டாக்கா, ஜூலை 21: வங்கதேசம் தலைநகர் டாக்காவின் உத்தரா பகுதியில் ஒரு விமானம் (Bangladesh Plane Crash) விபத்துக்குள்ளானது. விமானப்படைக்கு சொந்தமான எஃப்-7 விமானம் (Air Force F-7 BGI) விபத்துக்குள்ளாகி பள்ளி கட்டிடத்தின் மேல் விழுந்தது. இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். விமானப்படை விமானம் மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி அருகே விழுந்து நொறுங்கியதாக கூறப்படுகிறது. இது விழுந்தவுடன், விமானத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்தநிலையில், விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றனர்.

நடந்தது என்ன..?


டாக்காவின் உத்தரா பகுதியில் உள்ள தியாபாரி பகுதியில் உள்ள மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் விமானப்படை பயிற்சி விமானம் F-7 BGI மோதியதாக வங்கதேச ராணுவ மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. தீயணைப்பு படை அதிகாரி லிமா கான், விபத்தை உறுதிப்படுத்தியது மட்டுமின்றி 19 பேர் உயிரிழந்ததாகவும், 4 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்தனர்.

ALSO READ: மீண்டும் மீண்டும் சிக்கலில் சிக்கும் ஏர் இந்தியா.. மும்பையில் ஓடுபாதையில் இருந்து விலகி சென்ற விமானம்..!

வங்கதேச விமானப்படை பயிற்சி விமானம் F-7 BGI இன்று அதாவது 2025 ஜூலை 21ம் தேதி பிற்பகல் பயிற்சி விமானத்தில் சென்று கொண்டிருந்தபோது, டாக்காவின் உத்தரா பகுதியில் உள்ள மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் மோதியது. விமானம் விழுந்தவுடன் தீப்பிடித்தது. தீயின் அதிக தீப்பிழம்புகள் அருகிலுள்ள மரங்களையும் சூழ்ந்தன. வானம் கரும்புகையால் நிரம்பிருந்தது. தீயை அணைக்க எட்டு தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதனுடன் காவல்துறை, தீயணைப்புப் படை, ஆம்புலன்ஸ் ஆகியவை சம்பவ இடத்தை அடைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.

ALSO READ: புறப்படும்போது ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு.. கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணிகள்!

அதிக அளவிலான புகை:

விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன், வங்கதேச ராணுவ வீரர்கள், தீயணைப்பு மற்றும் சிவில் பாதுகாப்பு பிரிவின் 8 பிரிவுகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை தொடங்கினர். சமூக ஊடகங்களில் வைரலான வீடியோவில், மைல்ஸ்டோன் கல்லூரி வளாகத்திலிருந்து புகை அதிகப்படியாக வெளியேறினர். இருப்பினும், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.