அமெரிக்காவின் அழுத்தத்திற்கு மத்தியில் இந்தியா – ரஷ்யா தலைவர்கள் சந்திப்பு.. என்ன சொல்கிறது? சீனா விளக்கம்..
India Russia Meet: இந்தியா–ரஷ்யா உறவு மிகவும் முழுமையானதும் இயல்பானதும் ஆகும்; மேலும் வெளிப்புற அழுத்தம் மற்றும் குறுக்கீடுகளை எதிர்கொள்ளும் திறன் அதிகமாக உள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த வருகை மூலம் இந்தியாவும் ரஷ்யாவும் உலகிற்கு தெளிவான செய்தி அனுப்பியுள்ளன — இரு நாடுகளும் தனிமைப்படுத்தப்படவில்லை என லி தெரிவித்துள்ளார்.

கோப்பு புகைப்படம்
டிசம்பர் 6, 2025: ரஷ்யாவுடன் நடைபெறும் வர்த்தகத்தை குறைக்க இந்தியா மீது மேற்கத்திய நாடுகள் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் இரண்டு நாள் இந்தியா பயணம், இரண்டு நாடுகளும் தனிமைப்படுத்தப்படவில்லை என்பதற்கான தெளிவான செய்தி என சீன அரசு ஊடகங்கள் வர்ணித்துள்ளன. 23வது இந்திய–ரஷ்ய உச்சிமாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் புதின், இரண்டு நாள் அரசு பயணமாக தனி விமானத்தில் இந்தியா வந்தார். அவரை பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றார். இதன் பின்னர் நடைபெற்ற 23வது உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் புதின் பங்கேற்றனர். இதன்போது இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவைப் பற்றி இரு தலைவர்களும் நீண்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பு ஒரு தெளிவான செய்தி:
இந்த சூழலில் புதினின் இந்தியா வருகையை குறிப்பிட்டு சீன ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. உலகளாவிய ஒத்துழைப்பை நாடும் அதே நேரத்தில், உக்ரைன் அமைதி ஒப்பந்தத்திற்காக அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வரும் முக்கிய தருணத்தில், ரஷ்ய அதிபர் இந்தியா பயணத்தை மேற்கொண்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது. சீன வெளிநாட்டு விவகார பல்கலைக்கழக பேராசிரியரைக் மேற்கோள் காட்டி குளோபல் டைம்ஸ் தெரிவித்ததாவது:
“ரஷ்யா–இந்தியா ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பு, இரு நாடுகளும் தங்கள் சுதந்திரமான மற்றும் தன்னாட்சி திறன்களை மேலும் வலுப்படுத்த உறுதியாக உள்ளன என்பதை தெளிவாக காட்டுகிறது” என தெரிவித்தார்.
மேலும் படிக்க: புதினுக்கு வழங்கப்பட்ட இந்திய உணவுகள்…கேட்டாலே நாவில் எச்சில் ஊறுகிறது!
இந்தியா–ரஷ்யா உறவு மிகவும் முழுமையானதும் இயல்பானதும் ஆகும்; மேலும் வெளிப்புற அழுத்தம் மற்றும் குறுக்கீடுகளை எதிர்கொள்ளும் திறன் அதிகமாக உள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த வருகை மூலம் இந்தியாவும் ரஷ்யாவும் உலகிற்கு தெளிவான செய்தி அனுப்பியுள்ளன — இரு நாடுகளும் தனிமைப்படுத்தப்படவில்லை என லி தெரிவித்துள்ளார்.
இந்தியா ரஷ்யா எதிராக அமெரிக்காவின் நடவடிக்கை பலிக்காது:
இரு தரப்பினரும் பரஸ்பர ஆதரவை விரிவுபடுத்தி, வலுவான நம்பிக்கைத்தன்மையையும் அனுபவிக்கின்றனர். இதன் பொருள் ரஷ்யா மற்றும் இந்தியாவுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின் தடைகள் அல்லது அழுத்தங்கள் வெற்றி பெற முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ரஷ்ய அதிபர் புதின் 125 நாடுகளை தவிர்த்து இந்தியா வந்தது ஏன்? முழு விவரம் இதோ…
இந்தியாவின் பங்களிப்பு ஏன் அவசியம்?
இதற்கிடையில், இந்தியா வரலாற்று ரீதியாக ரஷ்யாவுடன் ஆழமான உறவுகளை பேணி வந்தபோதும், புதினின் இந்த வருகை, இந்தியாவின் ஏற்றுமதிக்கு முக்கியமானதாகக் கருதப்படும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒப்பந்தங்களை பாதிக்கக்கூடும் என விமர்சகர்கள் கருதுகின்றனர். மேலும், வர்த்தக வேறுபாடுகள் தொடர்பான சிக்கல்கள் நிலவியிருந்தாலும், இந்தியாவுடன் தனது உறவுகளை மேம்படுத்த அமெரிக்கா தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு உத்தி பற்றிய புதிய அறிக்கை, இந்தோ–பசிபிக் பிராந்தியத்தில் உருவாகி வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் இந்தியாவின் பங்களிப்பு அவசியம் எனக் குறிப்பிடுகிறது.