காதலனின் இச்சைக்கு குழந்தைகளை இரையாக்கிய காதலி.. குழந்தைகள் பரிமரிப்பாளர் போர்வையில் நடந்த கொடூரம்!
Babysitter Gets 100 Years of Prison | அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தை சேர்ந்த லையான் என்ற பெண் ஆன்லைனில் தன்னை ஒரு குழந்தைகள் பராமரிப்பாளர் என கூறி, தன்னிடம் வரும் குழந்தைகளை தனது காதலனின் பாலியல் இச்சைக்கு இரையாக்கி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லையான்
கலிஃபோர்னியா, ஆகஸ்ட் 18 : அமெரிக்காவின் (America) கலிஃபோர்னியா (California) மாகாணத்தில் குழந்தைகள் பராமரிப்பாளராக பணியாற்றி வந்த பெண், குழந்தைகளை தனது காதலனின் பாலியல் இச்சைக்கு இரையாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 7 வயது சிறுமி ஒருவரை அவரது பெற்றோர்கள் குழந்தைகள் பராமரிப்பாளர் பெண்ணிடம் அனுப்பி வைத்தபோது அந்த சிறுமி அங்கு செல்ல மாட்டேன் என அழுதுள்ளார். இதனால் ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
பராமரிப்பாளருடன் செல்ல மறுத்த 7 வயது சிறுமி
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் டிகோ நகரில் வசித்து வருபவர் பிரிட்னி மே லையான். இவர் தன்னை குழந்தைகள் பராமரிப்பாளராக ஆன்லைனில் பதிவிட்டுள்ளார். அதனை நம்பி வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் சிலர் லையானிடம் தங்களது குழந்தைகளை விட்டுச் சென்றுள்ளனர். அவ்வாறு பெற்றோர் தங்களது 7 வயது மகளை லையானிடம் விட்டு செல்ல முயன்றபோது, அந்த சிறுமி லையானுடன் செல்ல மாட்டேன் என அழுதுள்ளார். இதனால் சந்தேகமடைந்த சிறுமியின் பெற்றோர், சிறுமியிடம் அது குறித்து விசாரித்துள்ளனர்.
இதையும் படிங்க : 10 ஆண்டுகள் மர்மம்.. கூட்டம் கூட்டமாக இறந்த நட்சத்திர மீன்கள்.. உண்மையை கண்டுபிடித்த ஆய்வாளர்கள்!
சிறுமி சொன்ன திடுக்கிடும் தகவல்கள்
லையான், அவருடைய காதலன் சாமுவேலுக்கு சிறுமியை அனுப்பி வைத்துள்ளார். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சாமுவேல், அதனை வீடியோவும் பதிவு செய்து வைத்துள்ளார். இதுபோன்ற நூற்றுக்கணக்கான வீடியோக்கள் சாமுவேலின் லேப்டாப்பில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. லையான் மற்றும் அவரது காதலர் இணைந்து இதற்கு முன்பும் பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதை போலீசார் தங்களது விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர்.
இதையும் படிங்க : ரஷ்யாவில் 600 ஆண்டுகளில் முதல் முறையாக வெடித்த எரிமலை.. நிலநடுக்கத்தின் எதிரொலி?
குறிப்பாக சாமுவேல் மற்றும் லையான் ஆகியோர் பள்ளி படிக்கும்போதில் இருந்தே ஒன்றாக இருக்கும் நிலையில், பெண்கள் உடைமாற்றும் அறையில் ரகசிய கேமரா பொருத்தி அவர்களை வீடியோ பதிவு செய்ய சாமுவேல், லையானை பயன்படுத்தியுள்ளார். இதற்காக 2021 ஆம் ஆண்டு சாமுவேலுக்கு பரோல் இல்லாத கடுமையான சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
100 ஆண்டுகள் சிறை தண்டனை
இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் 3 வயது முதல் 7 வயது வரையிலான குழந்தைகளை சாமுவேல் பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், மாற்று திறனாளி குழந்தைகள் உட்பட ஏராளமான குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்ய காதலனுக்கு உதவிய குற்றச்சாட்டில் லையானுக்கு 100 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் பராமரிப்பாளர் என தன்னை அறிமுகம் செய்துக்கொண்ட பெண், குழந்தைகளை காதலலுக்கு இரையாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.