அயதுல்லா அலி கமேனியின் இறுதி சடங்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது!
Ayatollah Ali Khamenei Funeral Postponed | இன்று (மார்ச் 04, 2026) மாலை நடைபெறவிருந்த ஈரான் உட்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதி சடங்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மாற்றம் செய்யப்பட்ட தேதி விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அயதுல்லா அலி கமேனி
டெஹ்ரான், மார்ச் 04 : ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) மற்றும் அமெரிக்கா (America) நடத்திய பயங்கர தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் உட்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் உடல் இன்று (மார்ச் 04, 2026) மாலை நல்லடக்கம் செய்யப்பட இருந்த நிலையில் அது தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஈரானின் புனித நகரமான மாஷாத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட இருந்த நிலையில், அது தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட கமேனி
அணு ஆயுதங்கள் தயாரிக்கும் விவகாரத்தில் எழுந்த மோதல் காரணமாக பிப்ரவரி 28, 2026 அன்று முதல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ஈரானின் உட்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டார். அவரது மனைவி, மகள், மருமகன் உள்ளிட்டோரும் இதில் கொல்லப்பட்டனர். கமேனியின் மரணம் ஒரு தரப்பினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஒரு தரப்பினர் மிகவும் மகிழ்ச்சியாக அவரது மரணத்தை கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க : உச்சகட்ட பதற்றம்.. ஹார்முஸ் நீரிணையை மூடியது ஈரான்.. உலகப் பொருளாதாரத்திற்குப் பெரும் அச்சுறுத்தல்
அயதுல்லா அலி கமேனியின் இறுதி சடங்கு தள்ளிவைப்பு
இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதலில் பலியான கமேனியின் நல்லடக்கம் ஈரானின் புனித நகரமான மாஷாத்தில் இன்று நடைபெற இருந்தது. ஆனால், தற்போது அது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கமேனியின் இறுதி சடங்கம் மொத்தம் மூன்று நாட்கள் நடைபெற உள்ளதாக ஈரான் அறிவித்திருந்த நிலையில், தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கமேனியின் இறுதி சடங்கு எப்போது நடைபெறும் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க : அயதுல்லா அலி கமேனியின் மனைவி பலி.. உறுதி செய்த ஈரான் ஊடகங்கள்!
கமேனியின் மரணம் ஈரானை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மக்கள் வருகையை முன்னிட்டு தற்போது கமேனியின் இறுதி சடக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.